Russia: அரசியல்சாசனத் திருத்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு 2036 வரை புடின் அதிபராக நீடிக்கலாம்

ரஷ்ய அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட மக்கள் 2036 வரை புடின் அதிர்பராக நீடிக்கலாம் என்பதற்கான ஆதரவை கொடுத்திருக்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2020, 06:14 AM IST
  • தற்போதைய ஆட்சிக்காலத்தில் 2024-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் பதவி வகிக்கலாம்
  • 1999ஆம் ஆண்டு அதிபர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து அதிபராக புடின் பதவியேற்றார்
  • 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து அதிபரானார்.
  • 2008இல் புடினின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அதிபர் டிமித்ரி மெட்வெடெவ், புடினை ரஷ்யாவின் பிரதமராக்கினார்
  • நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த புடின் மீண்டும் 2012இலும் பிறகு 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்று தற்போது வரை அதிபராக தொடர்கிறார்
Russia: அரசியல்சாசனத் திருத்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு 2036 வரை புடின் அதிபராக நீடிக்கலாம் title=

2024-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்கலாம் என்ற நிலைமையில், தனது பதவிக்காலத்தை 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் நிறைவேற்றிவிட்டார். இருந்தாலும் மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த சட்டத்திருத்தம் மீது தொடங்கிய வாக்கெடுப்பு, கடந்த 25ஆம் தேதி தொடங்கி, 7 நாட்கள் நடைபெற்றது.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்கு பணி தொடங்கிய நிலையில், 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சட்டத் திருத்தத்திற்கு 76.9 சதவிகித வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளது. புதின் 2036ஆம் ஆண்டு வரை அதிபராக தொடரலாம் என மக்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். 

ரஷ்ய அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் ஆதரவளித்த ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றி தெரிவித்தார். வியாழக்கிழமை தனது நோவோ-ஒகாரியோவோ இல்லத்தில் இருந்து ரஷ்ய அதிபர் உரையாற்றினார்.

Read Also | வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, அலி ஃபசல் ஆகியோர் அளித்த நன்கொடை

இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்த புடின் 2036 வரை அதிபராக இருப்பதற்கு இந்த வாக்களிப்பு ஏதுவாக உள்ளது. அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான நாடு தழுவிய வாக்கெடுப்பு நேற்று ரஷ்யாவில் நடைபெற்றது. தொடக்கக்கட்ட முடிவுகள் 2018 அதிபர் தேர்தலை நினைவூட்டின. அந்த மறுதேர்தலில் பெரும்பான்மையான ஆதரவு பெற்று புடின் மாபெரும் வெற்றி பெற்றார்.

ரஷ்ய அதிபராக விளாடிமிர் நீடிக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கு 76 சதவிகித ரஷ்யர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24 சதவிகித மக்கள் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Also Read | 2011 World-cup cricket match fixing: இலங்கையில் விசாரணை தொடங்கியது

புரிந்துக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும் என்பதால் விளாடிமர் புடின் என்று ரஷ்ய அதிபரின் பெயரை நாம் உச்சரிக்கிறோம். அவருடைய சரியான பெயர் Vladimir Vladimirovich Putin (விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின்) என்பதாகும்.  

1952ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் பிறந்தார் விளாடிமிர் புடின். 1999ஆம் ஆண்டு  போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். அவரை அடுத்து அதிபராக பதவிக்கு வந்த புடின், 2000வது ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் அதிபரானார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்தும் புதிய அதிபர் டிமித்ரி மெட்வெடெவ் விளாடிமிர் புடினை ரஷ்யாவின் பிரதமராக அறிவித்தார்.

நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த புடின் மீண்டும் 2012 மார்ச் 4ஆம் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்று தற்போது அதிபராக தொடர்கிறார்.  

Also Read | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை

உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான கிரிமியா (Crimea) பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்தது விளாடிமிர் புடினின் சாதனைப் பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறது. ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைப்பதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், கிரிமியா நாட்டு மக்களில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைவதில் விருப்பம் தெரிவித்தனர்.

இதன் மூலம் சோவியத் குடியரசான ரஷ்யாவிலிருந்து 1954ல் பிரிந்த கிரிமியா மீண்டும் ரஷ்யாவுடன் இணைந்தது. ஆனால், இதன் காரணமாக தற்போது ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டிற்கும் இடையே பனிப்போர் தொடர்கிறது.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றின் கேள்வி நேரத்தில் பங்கேற்று, 85 கேள்விகளுக்கு, 4 மணி நேரம், 47 நிமிடங்கள் தொடர்ந்து சளைக்காமல் பதில் அளித்து உலக சாதனை நிகழ்த்தியவர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை: இண்டிகோ

சீனாவிலிருந்து ரஷ்யாவிற்கு எரிவாயு (Gas) கொண்டுவரும் திட்டத்திற்காக நிலத்திற்கு அடியில் குழாய்கள் (Pipeline) பதிக்கும் திட்டத்திற்காக சீனாவுடன் ரஷ்ய அதிபர் கையெழுத்திட்ட உலகின் மிகப் பெரிய அளவிலான கட்டுமானத்திட்டத்தின் மதிப்பு சுமார் 7000 கோடி டாலர் (USD 70 billion) என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விஷயமாகும்.  

இதுவரை ரஷ்ய அதிபர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

Boris Yeltsin (போரிஸ் யெல்ட்சின்) 1991 ஜூலை 10 – 1999 டிசம்பர் 31.

Vladimir Putin (விளாடிமிர் புடின்) 2000 மே 7 – 2008 மே 7

Dmitry Medvedev (டிமிட்ரி மெட்வதேவ்) 2008  மே 7 – 2012 மே 7

Vladimir Putin (விளாடிமிர் புடின்) 2012 முதல் ரஷ்யாவின் அதிபராக பதவி வகிக்கிறார். 2024 ஆம் ஆண்டு வரை அவர் அதிபராக பதவி வகிக்கலாம். தற்போதைய அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி 2036ஆம் ஆண்டுவரை விளாடிமிர் புடின் அதிபராக நீடிக்கலாம்.

Trending News