ரஷ்ய விமான விபத்து: இன்று துக்க தினம் அனுசரிப்பு

ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்றைய தினம் தேசிய துக்க தினமாக கடைபிடிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் அறிவித்துள்ளார்.

Last Updated : Dec 26, 2016, 09:03 AM IST
ரஷ்ய விமான விபத்து: இன்று துக்க தினம் அனுசரிப்பு title=

மாஸ்கோ: ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்றைய தினம் தேசிய துக்க தினமாக கடைபிடிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 92 பேருடன் சிரியாவிற்கு டியு-154 ரக ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது.

சிரிய நாட்டு அதிபருக்கு ஆதரவாக அந்நாட்டில் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, மேற்கு சிரியாவில் தனக்கென விமானப்படை தளத்தை அமைத்துள்ளது. இந்த தளத்திற்கு வழக்கமாக செல்லும் ராணுவ விமானம், அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு ராணுவ அதிகாரிகள், இசைக் கலைஞர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

இந்நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மாயமான டியு-154 விமானம், கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

மேலும், மீட்புப் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ள நிலையில், 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின், விமான விபத்துக்கு தனது வருத்தத்தை பதிவு செய்தார். மேலும், ரஷ்யாவில் இன்று ஒரு நாள் துக்க தினமாக ​கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Trending News