விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமரர் நரேந்திர மோடியுடன் பேசினார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 25, 2022, 06:16 AM IST
  • ரஷ்ய அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை
  • ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைக்கு புடினுக்கு அழைப்புவிடுத்த மோடி
  • இந்தியர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்வதாக புடின் உறுதி
விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி title=

உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமரர் நரேந்திர மோடியுடன் பேசினார்.

நேற்று இரவு (பிப்ரவரி 24, 2022 வியாழன்) விளாடிமிர் புட்டினுடனான தொலைபேசி உரையாடலின்போது (India - Russia Talk), ​​உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவை வலியுறுத்தினார்.

"வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்" என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் மோதல் நடவடிக்கைளில் இந்தியாவின் தலையிட வேண்டும் என்று உக்ரைன் கேட்டுக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர், ரஷ்ய அதிபருடன் பேசினார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  

இரு தலைவர்களுக்குமான உரையாடல் சுருக்கமாகவே இருந்தது. இந்தியப் பிரதமர் புடினிடம் பேசிய மோடி, "உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகளை" கருத்தில் கொள்ளுமாறு தெரிவித்தார், மேலும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன்: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் பேச உள்ளதாக தகவல்

உக்ரைனில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மோடிக்கு புதின் விளக்கமளித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் நேட்டோ குழுவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நேர்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களின் பாதைக்கு திரும்புவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இருதரப்பு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர குழுக்கள் தொடர்ந்து, ஆர்வமுள்ள பிரச்சினைகளில் வழக்கமான தொடர்புகளை தொடர்ந்து பராமரிக்க  இரு தலைவர்களும், ஒப்புக்கொண்டனர்.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

நேற்று காலையில், ரஷ்யா உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்த் தொடங்கியது, அதனையடுத்து, உக்ரைனின் பல நகரங்களை ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது.

பல்வேறு உக்ரேனிய உத்தியோகபூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டிய AFP, வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறுகிறது.

உக்ரைனில் 11 விமான நிலையங்கள் உட்பட 74 தரைக்கு மேல் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை தொடங்கிய தாக்குதலில் ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News