கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா! பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்

Russia vs Black Sea Grain Deal: கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்குவது சர்வதேச அளவில் கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 31, 2022, 09:14 AM IST
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா! பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் title=

புதுடெல்லி: உக்ரைன் - ரஷ்யா இடையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, ஐ.நா., மத்தியஸ்தம் கொண்ட கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதாக அறிவித்துள்ளது. பஞ்ச நெருக்கடியைத் தவிர்க்கவும், உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

கருங்கடல் தானிய ஒப்பந்தம்  

அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் பிற தானியங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்ற கருங்கடலின் சுற்றியுள்ள பகுதியின் ஏற்றுமதியை ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் பாதித்தது. ரஷ்யா-உக்ரைன் மோதல் உலகெங்கிலும் உள்ள உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்களை கொண்டு செல்வதில் தடையை ஏற்படுத்தியது.

முற்றுகையின் காரணமாக, டன் கணக்கில் கோதுமை மற்றும் தானியங்களை ஏற்றிய பல கப்பல்கள்  கருங்கடலில் பல நாட்களாக சிக்கித் தவித்தன. இறுதியாக, ஜூலை மாதம் ஐ.நா-வின் தரகு ஒப்பந்தம் ரஷ்யாவின் கடற்படை முற்றுகையை தளர்த்தியது மற்றும் மூன்று முக்கிய உக்ரேனிய துறைமுகங்களை மீண்டும் திறந்தது.

மேலும் படிக்க |  அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்!

முதல் கப்பல் 26,000 மெட்ரிக் டன் சோளத்தை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் 1 அன்று உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. ரஷ்யாவும் உக்ரைனும் ஜூலை 22 அன்று துருக்கியில் ஐ.நா ஆதரவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து, 9 மில்லியன் டன் சோளம், கோதுமை, சூரியகாந்தி பொருட்கள், பார்லி, ராப்சீட் மற்றும் சோயா ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைனை குற்றம் சாட்டும் ரஷ்யா, கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்குகிறது. உக்ரேனிய துறைமுகங்களில் சிக்கிய தானியங்களை விடுவிக்க, ஜூலை மாதம் ஐ.நா, கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தற்போது அதில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதால், உலக அளவில் உணவு விலைகள் மேலும் அதிகரிக்கும் என்பதோடு, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

ரஷ்யா ஏன் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியது?

ரஷ்யாவின் கூற்றுப்படி, கிரிமியாவின் செவஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று நடந்த தாக்குதலில், பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈடுபட்டதாகவும், கடந்த மாதம் எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியது.

மேலும் படிக்க | அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்... கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!

உக்ரைன், இதுவரை, இந்த தாக்குதல் பற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. மாஸ்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கருங்கடல் முன்முயற்சியில்' பங்கேற்கும் சிவிலியன் உலர் சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு ரஷ்ய தரப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது, ஒப்பந்தத்தை   செயல்படுத்துவதை காலவரையன்றி நிறுத்துகிறோம்."

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை "முற்றிலும் மூர்க்கத்தனமானது" என்று கண்டிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது பட்டினியை அதிகரிக்கும் என்றார். "அவர்கள் அவ்வாறு செய்வதற்கு எந்த காரணமும் இல்லை" என்று அமெரிக்க அதிபர் தெரிவித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்... ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்!

உலகை பாதிக்கும் ரஷ்யாவின் முடிவு

உக்ரைனில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு உணவு மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் உணவு நெருக்கடியைத் தவிர்க்க இந்த ஒப்பந்தம் உதவியுள்ளது. உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பைக் கொண்டுவருவதற்கான மிக முக்கியமான ஒப்பந்தமாக இது கூறப்பட்டது.

தற்போது ரஷ்யா, இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால், சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரித்து, இந்தியா போன்ற பிற நாடுகளிலும் பணவீக்கம் அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News