டெக்சாஸ்: கொரோனா இரண்டாவது அலை அடங்கிவரும் மகிழ்ச்சியிலும், மூன்றாவது அலை குறித்த அச்சத்திலும் உலக மக்கள் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக வந்துகொண்டிருக்கும் அறிவிப்புக்கு மத்தியில், அங்கு, டெக்சாசில் வசிக்கும் ஒருவருக்கு ஆபத்தான வைரஸான மங்கிபாக்சின் (Monkeypox) அறிகுறிகள் பதிவாகியுள்ளன.
இந்த நபர் சமீபத்தில்தான் ஆப்பிரிக்கா (நைஜீரியா) சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நோயாளி டல்லாஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிற ஏஜென்சிகள் அந்த நபருடன் தொடர்பு கொண்ட நபர்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளன. இந்த நோய் பரவாமல் தடுக்க அதிக அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
18 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய நோய்
Monkeypox என்ற இந்த அரிய நோய் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் (America) திரும்பியுள்ளது. சுமார் 2 தசாப்தங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் இந்த அரிய நோய் பரவியது. யுஎஸ்ஏ டுடேயில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, Monkeypox நோயால் பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏனெனில் COVID-19 ஐத் தடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இருப்பதால், ஒது பலருக்கு பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறப்படுகின்றது.
ALSO READ: தாலிபானுக்கு உதவுகிறது பாகிஸ்தான்: குற்றம் சாட்டும் ஆப்கான் துணை அதிபர்
இந்த அரிய நோய் தீவிர வடிவத்தை எடுக்கக்கூடும்
சி.டி.சி-யின் படி, Monkeypox வைரஸ் பெரியம்மை வைரஸ்களின் வகைகளைச் சேர்ந்தது. ஆனால் இது ஒரு அரிய நோயாகும். இதில், நோயாளிக்கு முகம் மற்றும் உடல் முழுவதும் தடிப்புகள் மற்றும் சொறி ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த தொற்று 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இது லேசான தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று அறியப்பட்டாலும், இது ஒரு தீவிர வைரஸ் நோயின் வடிவத்தையும் எடுக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த Monkeypox வைரஸ் நோய் விலங்குகளால் கடிக்கப்படுவதாலோ அல்லது அவற்றுடன் தொடர்பு கொள்வதாலோ ஏற்படுகிறது. பெரிய சுவாச நீர்த்துளிகள் மூலம் Monkeypox ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
Monkeypox வைரஸ் பரவல் அதிகப்படியாக ஆப்பிரிக்காவில் (Africa) இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Monkeypox ஆல் பாதிக்கப்பட்ட முதல் நபர் பற்றி 1970 ல் காங்கோ ஜனநாயக குடியரசில் தெரிய வந்தது. அதே நேரத்தில், 2003 ல் அமெரிக்காவில் Monkeypox பரவியது. அப்போது அங்கு 47 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.
ALSO READ: இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் படுகொலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR