கோடிக்கணக்கான மதிப்புள்ள அரண்மனை கோட்டையை 87 ரூபாய்க்கு விற்ற மகன் மீது இளவரசர் வழக்கு

அரசர் என்றால் கொடையும், நன்கொடையும் வழங்குவது இயல்புதான். ஆனால், இந்தக் காலத்தில் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98க்கு யாராவது ஒரு அரண்மனையையும், கோட்டையையும் விற்பார்களா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2021, 10:40 PM IST
  • இந்த கோட்டையின் விலை 87 ரூபாய்!
  • விற்ற மகன் மீது இளவரசர் வழக்கு
  • குடும்ப கோட்டையை இப்படி விற்கலாமா என்று நீதிமன்றத்தில் அப்பா இளவரசர் வழக்கு
கோடிக்கணக்கான மதிப்புள்ள அரண்மனை கோட்டையை 87 ரூபாய்க்கு விற்ற மகன் மீது இளவரசர் வழக்கு   title=

அரசர் என்றால் கொடையும், நன்கொடையும் வழங்குவது இயல்புதான். ஆனால், இந்தக் காலத்தில் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98க்கு யாராவது ஒரு அரண்மனையையும், கோட்டையையும் விற்பார்களா?

அப்படி விற்றால், அரசராக இருந்தாலும் அப்பாவுக்கு கோபம் வரும் தானே? அப்படித் தான் சீறி சினந்திருக்கிறார் இளவரசர் Ernst August.

66 வயதான இளவரசர் ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட், மரியன்பர்க் கோட்டை மற்றும் காலன்பர்க் தோட்டத்தை 2000களின் மத்தியில் தனது மகன் எர்ன்ஸ்ட் ஆகஸ்டு பெயருக்கு மாற்றிக் கொடுத்தார்.  

Also Read | சமோலி வெள்ளத்திற்குப் பிறகு உத்தராகண்ட்டில் உருவான அற்புதமான இயற்கை ஏரி

ஆனால் அதை வாங்கிக் கொண்ட மகனோ, குடும்பத்தின் சொத்தான கோட்டையை ஒரு யூரோவுக்கு அரசாங்கத்திற்கு விற்றதைக் கண்டு வெகுண்டெழுந்துவிட்டார் அப்பா. ஹனோவர் மாளிகையின் உரிமையாளரும், ராணியின் தொலைதூர உறவினருமான இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட், தனது மகன் 'தனக்குத் தெரியாமல்' கோட்டையை அரசாங்கத்திற்கு விற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அது மட்டுமல்ல, தனது மகன் குடும்பத்திற்கு சொந்தமான பழம்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளை முறையற்ற முறையில் கையகப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த கோட்டை மிகவும் பழமையானது என்பதையும், கோட்டையை புனரமைக்க GBP 23 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் வந்து இந்தக் கோட்டையை பார்வையிடுகின்றனர்.
 
இளவரசர் ஆகஸ்ட் கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றத்தை அணுகி, மரியன்பேர்க் கோட்டை, காலென்பர்க் மேனர் வீடு மற்றும் ஹெரென்ஹவுசனில் உள்ள ஒரு அரச சொத்து ஆகியவற்றை பரிசாக கொடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

வழக்குத் தொடுத்துள்ள ஜெர்மன் இளவரசர் ஆஸ்திரியாவில் வசிக்கிறார், அவரைப் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய சொத்துக்கள் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் யூரோக்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும் 37 வயதான எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் ஜூனியர், ஜேர்மனிய செய்தி நிறுவனமான டிபிஏவிடம் பேசினார். இந்த வழக்கு சரியானது இல்லை, ஏற்கனவே பலமுறை நீதிமன்றம் இது தொடர்பான வழக்குகள் செல்லாதவை என்றும் கூறினார்.

"லோயர் சாக்சனியின் மைய கலாச்சார நினைவுச்சின்னமாக மரியன்பர்க்கை நீண்டகாலமாக பாதுகாப்பது சரியான முடிவு இல்லை, இது அனைவருக்கும் திறந்திருக்கும்" என்று அவர் கூறினார்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News