இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் லண்டனில் உள்ள பிரபல இந்து கோவிலான சுவாமிநாராயண் கோவிலுக்கு சென்றார்.
இங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் ஆதரவை பெறும் நோக்கில், அங்குள்ள சுவாமி நாராயண் கோயிலுக்கு போரீஸ் ஜான்சனும், அவரது மனைவி கேரி சைமன்ட்சும் சென்றனர். முதலாவது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை தொடங்கியுள்ள சைமண்ட்ஸ் கோவிலுக்கு சிவப்பு நிற பட்டுசேலை அணிந்து சென்றார்.
சாமி தரிசனம் செய்த பின் பேசிய அவர், ”புதிய இந்தியாவை அந்நாட்டின் பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். அது எனக்கு தெரியும். இந்திய பிரதமரின் இம்முயற்சிக்கு, பிரிட்டனில் ஆட்சியில் இருக்கும் எனது தலைமையிலான அரசு முழுமையாக ஆதரவு அளிக்கும். என்று தெரிவித்தார்.
Prime Minister of Britain Boris Johnson visited Shri Swaminarayan Mandir (Neasden Temple) in London, last night. He offered prayers, spoke to community leaders, children, common people, and addressed an audience. pic.twitter.com/udtPcmSIra
— ANI (@ANI) December 9, 2019