முதன்முதலாக கொரோனாவுக்கு அடிபணிந்து மாஸ்க் போட்ட Pope Francis

ஒன்றில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ் முதன்முறையாக முகக்கவசம் அணிந்திருந்தார், பிற மதத் தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் அமைதிக்கான பிரார்த்தனை சேவையில் கலந்து கொண்டார் போப் பிரான்சிஸ்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 11:59 PM IST
முதன்முதலாக  கொரோனாவுக்கு அடிபணிந்து மாஸ்க் போட்ட Pope Francis  title=

ஒன்றில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ் முதன்முறையாக முகக்கவசம் அணிந்திருந்தார், பிற மதத் தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் அமைதிக்கான பிரார்த்தனை சேவையில் கலந்து கொண்டார் போப் பிரான்சிஸ்.

Aracoeliயில் உள்ள Basilica of Santa Mariaவில் பிரார்த்தனையில் கலந்துக் கொண்ட போப் பிரான்சிஸ்,  வெள்ளை நிற முகக்கவசத்தை அணிந்திருந்தார். இதற்கு முன்னதாக Vaticanஇல் வாரந்தோறும் பார்வையாளர்களை சந்திக்கும்போது காரில் செல்லும்போது மட்டும் முகக்கவசம் அணிந்திருந்தார்.  
பொது பார்வையாளர்களை சந்திக்கும்போது முகக்கவசம் அணியவில்லை என்றும்,  சில சமயங்களில் பார்வையாளர்களை மிகவும் நெருங்கி வந்ததற்காகவும், சமூக ஊடகங்களில் போப் பிரான்சிஸுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

83 வயதான பிரான்சிஸ், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவரான பேட்ரியார்ச் பார்தலோமெவ் உட்பட பசிலிக்காவில் உள்ள மற்ற கிறிஸ்தவ தலைவர்களுடன் சேவையில் கலந்து கொண்டார்.

கடந்த சில வாரங்களாக இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. எனவே பல மதத் தலைவர்களும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை நடத்த முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, ரோமில் மற்ற இடங்களில், நகரத்தின் ஜெப ஆலயத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர், பெளத்தர்கள், சீக்கியர்கள், இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்களும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.   
வத்திக்கானில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவாகவே உள்ளது. அங்கு சுவிஸ் காவலர்கள், போப்பைப் பாதுகாக்கும் உயரடுக்கு மற்றும் சாதாரண உடையணிந்த பாதுகாவலர்கள் என பாதுகாவல் பணியில் இருக்கும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

போப்புக்கு சிறு வயதில் ஏற்பட்ட ஒரு நோயின் போது நுரையீரலின் ஒரு பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு படிகளில் ஏறும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR  

Trending News