பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில், தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அந்த வாகனத்தில் இருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாட்டம் விமான நிறுவனம்,"அந்த விமானத்தில் மொத்தம் 102 பயணிகள் இருந்தனர். விபத்தால் பயணிகள் உள்பட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. https://zeenews.india.com/tamil/topics/Peru
விமானம், தீயணைப்பு வாகனத்துடன் மோதும் வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் முழு வேகத்தில் ஓடுபாதையில் வந்துகொண்டிருந்ததால், வந்த வேகத்தில் அந்த வாகனத்தையும் விமானம் இழுத்துச்சென்றுள்ளது. இதனால், வாகனம் தீ பிடித்து எரிந்ததில், அப்பகுதி முழுவதும் கரும்புகை நிரம்பியது. விமானத்தின் பக்கவாட்டு பகுதியும் சற்று எரிந்துள்ளது.
இதுகுறித்து விமானநிலையம் தரப்பு கூறுகையில்,"விமான ஓடுதளத்தில் நடந்த விபத்தால், இரண்டு பேர் உயிரிழந்ததற்கு எங்களின் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம். லிமா நகரில் இருந்து ஜூலியாக்கா நகருக்கு புறப்பட்ட LA2213 பயணிகள் விமானமும், தீயணைப்பு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது" என்றனர்.
#LATAM #airplanecrash update. Looks like the Lima Airport tower failed to control the traffic on the runway. Fire truck and airplane on runway. pic.twitter.com/FQOVo3mE6T
— Dore (@Sharkpatrol32) November 18, 2022
பயணிகள் நலமுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பிரத்யேக குழுவினர் செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் இருப்பதை கவனிக்காதது யாருடைய தவறு என்று விசாரணை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமா? பாலியல் தொழிலுக்கு ஏலம் விடும் கொடுமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ