உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? எண்ணெய், தங்கம் அதிகம்..!

இன்றும் உலகின் ஏழ்மையான நாடுகள் இருக்கின்றன. எண்ணெய், தங்கம் இருந்தும் அந்த நாடுகள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருகின்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 6, 2024, 04:46 PM IST
  • உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகள்
  • ஒருவேளை உணவுக்காக ஏங்கும் மக்கள்
  • தங்கம், எண்ணெய் வளம் அதிகம் இருக்கிறது
உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? எண்ணெய், தங்கம் அதிகம்..! title=

இன்றைய உலகம் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி என படிப்படியாக புதிய உயரத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஆடம்பரத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு சில நாடுகளில் ஒருவேளை உணவுக்கே மக்கள் படாதபாடு பட வேண்டிய நிலை இருக்கிறது. கேட்பதற்கு வியப்பாக இருக்கலாம், ஆனால் ஒரு கைப்பிடி உணவுக்கு கோடிக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். வசதியான நாடுகளில் மக்கள் வீண் என தூக்கி எறியும் உணவுகள், ருசி இல்லை என தூக்கியெறியும் உணவுகளை எல்லாம் ஏழை நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத விலைமதிப்பு மிக்க உணவுகள் அவை. 

இத்தகைய உணவுப் பண்டங்களை எல்லாம் தங்கள் வாழ்நாளில் பார்த்துவிட வாய்ப்பே இல்லாத ஒரு மூலையில் இந்த உலகில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் வசிக்கும் நாட்டில் தான் அளவில்லாத எண்ணெய் வளமும், தங்க புதையல்களும் இருந்து கொண்டிருக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள் என்பதை பார்க்கலாம். 

மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகளின் எரிச்சலை கிளப்பும் இரான்! இஸ்பஹான் நகரில் அணுஉலை கட்டுமானம்

தெற்கு சூடான்: ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் உலகின் ஏழ்மையான நாடு. இங்கு 11 மில்லியன் அதாவது 1 கோடிக்கும் அதிகமான மக்கள் மிகவும் ஏழைகளாக உள்ளனர். தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபா. இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் அதளபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒருபோதும் முன்னேறவில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நாட்டில் எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும், இங்கு பொருளாதாரம் முன்னேறவில்லை.

புருண்டி: உலகின் இரண்டாவது ஏழ்மையான நாடு புருண்டி. இந்த நாடு நீண்டகாலமாக உள்நாட்டுப் போரை சந்தித்து வருகிறது. இங்குள்ள 80 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். இன்றும் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை விஷயங்களுக்காக புருண்டி போராட வேண்டியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: மத்திய ஆப்பிரிக்க குடியரசு உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடு. தங்கம், எண்ணெய், யுரேனியம் மற்றும் வைரம் போன்ற பல விலையுயர்ந்த ரத்தினங்களும் இங்கு உள்ளன. இருந்த போதிலும், 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது.

சோமாலியா: உலகின் நான்காவது ஏழை நாடு சோமாலியா. இந்த முழு நாட்டிலும் உறுதியற்ற தன்மை, இராணுவ அட்டூழியங்கள் மற்றும் கடற் கொள்ளையர்களின் பயங்கரவாதம் உள்ளது. சோமாலியா 1960-ல் சுதந்திரம் பெற்றது, அதன் பின்னர் அது பொருளாதார ரீதியாக சிக்கலில் உள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 26 லட்சம்.

காங்கோ: காங்கோ உலகின் ஐந்தாவது ஏழை நாடு. சர்வாதிகாரம், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறை ஆகியவை காங்கோவில் நிலைமையை மோசமாக்கியுள்ளன. காங்கோவின் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் (166 இந்திய ரூபாய்) கூட செலவழிக்க முடியாது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்?

Trending News