உற்ற நண்பன் சீனா வழி நடக்கும் பாகிஸ்தான்.. என்ன தான் நடக்கிறது பலுசிஸ்தானில்..!!!

பாகிஸ்தானின் மேற்கு மாகாணம் பலுசிஸ்தான். அங்கு பல தசாப்தங்களாக பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 08:03 PM IST
  • பாகிஸ்தானின் மேற்கு மாகாணம் பலுசிஸ்தான். அங்கு பல தசாப்தங்களாக பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
  • கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பலூச் மிகவும் பின் தங்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எழுபதுகளில் பலூச் சுதந்திரத்திற்கான கோரிக்கை மிகவும் வலுவடைந்தது.
  • பலூச்சில் சுதந்திரத்திற்காக மக்கள் கொரில்லா தாக்குதலை பின்பற்றுகின்றனர். பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பலூச் பிரிவினைவாதிகளின் மிகப்பெரிய அமைப்பாகும்.
உற்ற நண்பன் சீனா வழி நடக்கும் பாகிஸ்தான்.. என்ன தான் நடக்கிறது பலுசிஸ்தானில்..!!! title=

சீனாவில் (China), மதத்தை வைத்து செய்யப்படும் கொடுமைகள் புதியதல்ல. அங்கு மில்லியன் கணக்கான உய்குர் முஸ்லீம்கள் (Uighur Muslims) முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இப்போது அதன் உற்ற நண்பனான பாகிஸ்தானின்  (Pakistan) அட்டூழியங்களும், வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பலூசிஸ்தான் (Baluchistan) சுதந்திரம் வேண்டும் என கோருபவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது. சீனா வழை நடக்கு பாகிஸ்தான், தற்போது பலுசிஸ்தானில்,  அரசை எதிர்ப்பவர்களை, மூளை சலவை செய்கிறது. அவர்கள்  பயங்கரமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

பாகிஸ்தானின் (Pakistan) மேற்கு மாகாணம் பலுசிஸ்தான். அங்கு பல தசாப்தங்களாக பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. உண்மையில், இந்தியாவில் இருந்து பிரிந்த பின்னர், பாகிஸ்தான், சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களை மட்டுமே கவனித்து வருகிறது, பலூசிஸ்தான் மீது ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை என்று பலூச் மக்கள் நம்புகிறார்கள். இதன் விளைவாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பலூச் மிகவும் பின் தங்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எழுபதுகளில் பலூச் சுதந்திரத்திற்கான கோரிக்கை மிகவும் வலுவடைந்தது. பாகிஸ்தானின் அப்போதைய பூட்டோ அரசாங்கம்  அடக்குமுறையை பின்பற்றி, பலூச் மக்களைக் கொல்லத் தொடங்கியது.

மேலும் படிக்க | இந்திய வீரர்களை கண்டு அஞ்சி நடுங்கும் சீனாவின் ”சாக்லேட் வீரர்கள்”... காரணம் என்ன..!!!

1973 ஆம் ஆண்டில், இராணுவத்திற்கும் பலூச் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் சுமார் 8 ஆயிரம் பலூச் மக்கள் கொல்லப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் சுமார் 500 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பலூசிஸ்தான் (Baluchistan)  இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனால் இந்த பாகிஸ்தானின் பிற மாகாணங்கள் வளர இந்த வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  பலூசிஸ்தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இப்போது பலூச்சில் சுதந்திரத்திற்காக மக்கள் கொரில்லா தாக்குதலை பின்பற்றுகின்றனர். பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பலூச் பிரிவினைவாதிகளின் மிகப்பெரிய அமைப்பாகும். இதனுடன் விடுதலையை விரும்பும் வேறு சிறு அமைப்புகளும் இணைந்து வலுபெற்று வருகிறது. பலூசிஸ்தானைப் பிரிக்குமாறு பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நெருக்குதல் அளிக்கப்பட்டுவருகிறது.

இதைக் கண்டு அஞ்சும் பாகிஸ்தான், தனது உற்ற நண்பனான சீனா வழி நடந்து,  பலூச் குடிமக்களை  முகாம்களில் சிறையில் அடைத்து மூளை சலவை செய்து வருகிறது. அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகும் கொடுமைபடுத்தப்படுகின்றனர்.

மேலும் படிக்க | 1962 போரில் லடாக் ரெசாங் லாவின் வீர வரலாறு தெரியுமா..!!

பலுசிஸ்தானின் நுகி மாவட்டத்தில்,இரண்டு முகாம்கள் உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின்  முன்னாள் இயக்குநர் ஜெனரல் லெப்டினென்ட் அசிம் சலீம் பஜ்வா இதனை உருவாக்கியுள்ளார்.

பலூச்சிஸ்தான் சுதந்திரத்தை ஆதரிக்கும் பலூச் போராளிகள் மட்டுமல்ல, பொது மக்களும் இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் குறைந்தது மூன்று மாதங்களாவது வைக்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகிறார்கள். 

இதில் பலன் இல்லை என்றால், பல விதமான சித்தரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இத முகாம்களுக்கு ஊடக்கங்கள் வெளிநாட்டவர் என யாருக்கும் அனுமதி இல்லை.

பலூச் சுதந்திரத்தை ஆதரிக்கும், மற்ற நாடுகளில் குடியேறியுள்ள பாகிஸ்தான் தலைவர்கள், இந்த முகாம்களில் நடத்தப்படும் சித்திரவதை குறித்து பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியாவின் எல்லையில் கேபிள்கள் பதிப்பதாக வெளியாகும் செய்திகளை மறுக்கும் China

ஆனால், பாகிஸ்தான் அப்படி எதுவுமே இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது.

Trending News