புல்வாமா எதிரொலி, 44 பயங்கரவாதிகளை கைது செய்தது பாகிஸ்தான்!

புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 5, 2019, 06:50 PM IST
புல்வாமா எதிரொலி, 44 பயங்கரவாதிகளை கைது செய்தது பாகிஸ்தான்! title=

புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

2001-ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்திய பாராளுமன்ற தாக்குதல் முதல் சமீபத்திய நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதல் வரையில் இந்தியாவில் நடைப்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பெருப்பேற்றுள்ளது. 

இந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் என கூறப்படுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாவற்றுக்கும் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு கடந்த 2002-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது, எனினும் தற்போது பாகிஸ்தானில் செயல்பட்டுதான் வருகிறது.

சமீபத்தில் நடைப்பெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதைதொடர்ந்து, ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் மற்றும் பலாக்-ஐ-இன்சானியட் அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. 

லஷ்கர்-இ- தொய்பா மற்றும் மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 68 பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துர் ரவூப் மற்றும் ஹம்மாத் அசார் உள்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் இன்று தெரிவித்துள்ளது

இந்த தகவலை பாகிஸ்தான் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஷெஹ்ர்யார் அஃப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாத இயக்கங்களை முடக்கும் நாடு தழுவிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் இன்னும் பலர் கைதாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Trending News