Dubai: விமானத்தில் Corona நோயாளி இருந்ததால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் (Corona virus) உலகம் முழுவதும் பரவி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்திய அரசின் முயற்சியில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 04:20 PM IST
  • ஜெய்ப்பூரிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கொரோனா நோயாளி ஒருவர் பயணம் செய்தார்
  • துபாய் அரசு ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்கள் தடை விதித்துள்ளது
Dubai: விமானத்தில் Corona நோயாளி இருந்ததால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து! title=

துபாய்: கொரோனா வைரஸ் (Corona virus) உலகம் முழுவதும் பரவி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்திய அரசின் முயற்சியில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இதனால் பாதிப்பு அதிகம். ஏனெனில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானச் சேவைகளை துபாய் அடுத்த 15 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் விமானத்தில் பயணித்ததால் இந்த சிக்கல் எழுந்துள்ளது.  

கொரோனா பாதிப்பு இருந்த ஒருவர் செப்டம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரிலிருந்து துபாய்க்கு விமானப் பயணம் மேற்கொண்டதாக துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் எஸ்.ஏ. போக்குவரத்து மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. எனவே துபாய் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலமாக பயணித்த இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.  இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த தடை அக்டோபர் 2 வரை தொடரும்.

பயணிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தது!

2020 செப்டம்பர் நான்காம் தேதியன்று, இந்த பயணி ஜெய்ப்பூரிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணிக்கு ஏற்கனவே கொரோனா பாஸிடிவ் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, இதை விதிமீறல் என்று கூறும் துபாயின் சிவில் ஏவியேஷன் ஆணையம்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அனைத்து விமானங்களுக்கும் அக்டோபர் 2 வரை தடை விதித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்றால் என்ன?
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவின் முதல் பொதுத்துறையான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின், பட்ஜெட் விமானப் பிரிவாகும் (Budget Airline).   2005 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த விமானச்சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் இருந்து துபாய், மஸ்கட், அபுதாபி மற்றும் ஒரு சில நகரங்கள் உட்பட வளைகுடா பகுதிக்கு விமானங்களை இயக்குகிறது. ஆனால் இப்போது அக்டோபர் 2 வரை எந்த விமானங்களும் துபாய்க்கு செல்ல முடியாது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய அரசு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸைப் பயன்படுத்தி வந்தது.

Also Read | News Tidbits செப்டம்பர் 17: இன்றைய சில முக்கியமான செய்திகள்...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News