கொரோனா தொற்று பரவல் தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஆனாலும், மனித சமுதாயம் அதற்கான தீர்வுகளை கணடறிவதில் முழு மூச்சுடன் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது எனலாம். தடுப்பூசிகள், கொரோனாவை கண்டறியும் கருவிகள், பரிசோதனை முறைகள் என விஞ்ஞானிகள் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர்.
கோவிட் -19 (Covid-19) பரிசோதனையை எளிமைப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், சிங்கப்பூர் (Singapore) 1 நிமிடத்தில் கொரோனா தொற்று உள்ளதாக என்பதை கண்டறியும் சாதனத்தின் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவிக்கு 'ப்ரெஃபென்ஸ் கோ கோவிட் -19 ப்ரீத் டெஸ்ட் சிஸ்டம்' ( BreFence Go COVID breath test ) என்று பெயரிடப்பட்டுள்ளது, இது இந்திய வம்சாவளியை பேராசிரியரின் உதவியுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தயாரித்துள்ளது.
ALSO READ | ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?
இது விமான நிலைய பரிசோதனைச் சாவடிகளில் பயன்படுத்தப்படும்
இந்த சாதனம் சிஙக்ப்பூர் தேசிய பல்கலைகழகத்தை சேர்ந்த ப்ரீதோனிக்ஸ் (Breathonix) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றை மூச்சின் மூலம் சோதிக்க ஒப்புதல் பெற்ற முதல் சாதனம் இதுவாகும். இந்த நிறுவனம் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இப்போது ப்ரீதோனிக்ஸ் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகத்துடன் (MoH) விமான நிலையங்களின் பரிசோதனை சாவடிகளில் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறபட்டுள்ளது. இந்த கருவியின் மூலம், நாட்டிற்கு உள்வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை எளிதாக மேற்கொள்ளலாம். இப்போது ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை மூலம் பயணிகள் இப்போது சோதிக்கப்படுகிறார்கள்.
இதில் ஊதினால் போதும், கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது உடனே தெரியும். இருப்பினும், சஇந்த பரிசோதனையுடன், கோவிட் -19 ராபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனத்தில் ஊத வேண்டும். பிறகு பரிசோதனையின் முடிவு ஒரு நிமிடத்திற்குள் கிடைக்கும். இந்த பரிசோதனையில் ஒரு நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், அதை உறுதிப்படுத்த RT-PCR முறையால் மீண்டும் பரிசோதிக்கப்படுவார்.
ALSO READ | கொரோனா மருந்து DRDO 2-DG: விலை விபரத்தை வெளிட்டது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR