எட்டு நாட்கள் நடைபெற்ற கட்சியின் மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தில் பேரணிகள் நடத்தப்பட்டன அந்தப் பேரணியில் வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை இடம்பெற்றது.
நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் அந்தப் பேரணியில் இடம்பெற்றன. இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று அந்த நாட்டின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆடம்பரமான அணிவகுப்புகளுடன் வட கொரியா தனது எட்டாவது கட்சி மாநாட்டின் நிறைவு நாளை கொண்டாடியது.
குறுகிய தூரம் சென்று தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணையான இது, ஒரு திட எரிபொருள் மூலம் இயங்கக் கூடியது. திரவ எரிபொருள் மூலம் இயஙக் கூடியதை விட மிகவும் விரைவாக இயங்கக் கூடியது. இதன் மூலம் பியோங்யாங், அமெரிக்கா மீது திடீர் தாக்குதலை நடத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், தனது தேர்ந்தல் பிரச்சாரத்தில் வட கொரியாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் வடகொரியாவின் அதிபரும் சர்வாதிகாரியுமான, கிம் ஜாங் உன்னை குண்டர் என்ற வகையில் விமர்சித்துள்ளார்.
ஜோ பிடன் கிம் ஜாங் உனை ஒரு குண்டர் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அவரை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசினார்.
இதனால், இது வடகொரியா, அமெரிக்காவிற்கு விடுத்துள்ள, மறைமுக செய்தியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ராணுவ அணிவகுப்பில், வட கொரிய சர்வாதிகாரி மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
ALSO READ | உலகின் மிக மர்மமான கிராமம்.. இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை...!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR