அதிரடி நாயகன் வட கொரிய அதிபர் Kim Jong Un உலகிற்கு கொடுத்த மற்றொரு ஷாக்..!!!

நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் இருக்கும் மாமிச தொழில் நிறுவனங்களிடம் அனைவரும் தங்கள் ஆசையாக வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டும் என கதிகலங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2020, 06:06 PM IST
  • நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் இருக்கும் மாமிச தொழில் நிறுவனங்களிடம் அனைவரும் தங்கள் ஆசையாக வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டும் என கதிகலங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்தார்.
  • பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 90 நிமிடங்களாவது தங்கள் நாட்டின் சர்வாதிகாரிகள் குறித்து பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
  • வட கொரியாவில், மூன்று நாட்களுக்கு முன்பாக, சந்தேகத்திற்கிடமான வகையில் வட கொரியாவின் எல்லையில் நுழைந்த தென்கொரியாவைச் சேர்ந்த நபரை, கடலில் வைத்தே விசாரணை நடத்திய பின்னர் வட கொரிய வீரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
அதிரடி நாயகன் வட கொரிய அதிபர் Kim Jong Un  உலகிற்கு கொடுத்த மற்றொரு ஷாக்..!!! title=

விந்தைகள் நிறைந்த நாடு வடகொரியா(North Korea) . அதன் சர்வாதிகாரி, கிம் ஜாங் உன் (Kim Jong Un) மர்மங்கள் நிறைந்தவர். அவர் செய்யும் செயல்கள் வினோதமானவை என்பதோடு பல நேரங்களில் கொடூரமானதும் கூட. 

சென்ற மாதம், வட கொரியா நாட்டில் உணவு தட்டுபாடு நிலவுகிறது. பல மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் இருக்கும் மாமிச தொழில் நிறுவனங்களிடம் அனைவரும் தங்கள் ஆசையாக வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டும் என கதிகலங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் படிக்க | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு

அவருடைய தங்கை அதற்கு சளைத்தவர் அல்ல. தங்கை கிம் யோ ஜாங் (Kim Yo-jong), பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 90 நிமிடங்களாவது தங்கள் நாட்டின் சர்வாதிகாரிகள் மற்றும் தற்போதுள்ள சர்வாதிகாரி குறித்து பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | வட கொரிய வரலாறு முக்கியம் அமைச்சரே... பாசமலர் தங்கையின் அதிரடி உத்தரவு..!!!

அதே போல், வட கொரியாவில், மூன்று நாட்களுக்கு முன்பாக, சந்தேகத்திற்கிடமான வகையில் வட கொரியாவின் எல்லையில் நுழைந்த தென்கொரியாவைச் சேர்ந்த நபரை, கடலில் வைத்தே விசாரணை நடத்திய பின்னர் வட கொரிய வீரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். பின்னர் கொரோனா வைரஸ் (Corona Virus) அச்சத்தால், அவரது உடலில் எண்ணெய் ஊற்றி எரித்தனர் என்று சியோல் இராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மேலும் படிக்க | நடுக்கடலில் விசாரணை, நொடிப்பொழுதில் தீர்ப்பு…வட கொரியாவும் அதன் நியாயங்களும்!!

இப்பொழுது கிம் ஜாங் உன் வேறு விதமாக அனைவருக்கும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார். ஆம், இந்த முறை ஒரு வித்தியாசமான ஷாக். 

தென் கொரியாவின் அதிகாரி ஒருவர் வட கொரியாவில் கொல்லப்பட்டதற்கு,  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு தெரிவித்ததாகத் தென் கொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மன்னிப்பு என்பது அகராதியில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்பது போல் வாழ்ந்து வரும், வட கொரிய சர்வாதிகாரியின் இந்த மன்னிப்பு, உண்மையிலேயெ உலக நாடுகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி தான்.

வட கொரிய அதிகாரி கிம் ஜாங் உன், இந்த எதிர்பாராத சம்பவத்திற்காக, தென் கொரிய மக்களிடமும்,  தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் (Moon Jae-in) இடமும் வருத்தம் தெரிவித்தார் என என்று  தென் கொரிய அதிபர் மூன் ஆலோசகர் சு ஹூன் கூறினார்.

நடுக்கடலில் எல்லை தான் வந்த அவர் தான் தென் கொரியாவிலிருந்து வந்தாக மட்டும் தெரிவித்தார். அதுதவிர துருப்புகளுக்கு வேறு எந்த தகவலையும்  தெரிவிக்காததால் துருப்புகள் காற்றில் சுட்டதாகவும் பின்னர் அவர் தப்ப முயன்றபோது அவரை நோக்கி பத்துமுறை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தபின்பு கொரோனா வழிகாட்டுதலின் படி அவரது உடலை எரித்ததாகவும் வட கொரியா செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News