எங்கள் நாட்டில், கொரோனா இல்லை.. இல்லவே இல்லை : Kim Jong Un

விந்தைகள் நிறைந்த நாடான வடகொரியா சர்வாதிகாரியின் இந்த கூற்று உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2020, 10:59 AM IST
  • விந்தைகள் நிறைந்த நாடான வடகொரியா சர்வாதிகாரியின் இந்த கூற்று உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
  • உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கையில், இது உலக தலைவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
  • சீன அதிபர் ஜின்பிங், தொழிலாளர் கட்சியின் நம்பகமான தலைமை மற்றும் அவர்களின் சாதனைகள் குறித்து சீனா 'மிகவும் மகிழ்ச்சியடைகிறது' என்று கூறினார்.
எங்கள் நாட்டில், கொரோனா இல்லை.. இல்லவே இல்லை : Kim Jong Un title=

பியோங்யாங் (Pyongyong): வட கொரியாவின் (North Korea) ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபரும் ஆன கிம் ஜாங் உன் , (WPK) 75 வது நிறுவக தினத்தின்போது, ​ தனது நாட்டில் ஒரு கொரோனா வைரஸ் தொற்று கூட இல்லை என்று கூறினார்.

வட கொரியா இராணுவ அணிவகுப்பு உரையின் போது, ​​'தனது நாட்டில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. அதற்கு பொதுமக்களுக்கு நன்றி' என்று கூறினார்.

விந்தைகள் நிறைந்த நாடான வடகொரியா சர்வாதிகாரியின் இந்த கூற்று உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கையில், இது உலக தலைவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

வட கொரியாவில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதற்கு நான் நன்றி கூறுகிறேன். இங்குள்ள மக்களின் சிறந்த ஆரோக்கியத்தையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார். நன்றி என்பதைத் தவிர வேறு ஒரு வார்த்தையை என்னால் நினைக்க முடியாது என்றும் இங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தை விட எங்கள் கட்சிக்கு முக்கியமானது எதுவுமில்லை என்று கிம் ஜாங் கூறினார்.

WPK இன் 75 வது நிறுவக தினத்தன்று சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய அதிபர் கிம் னாங் உன்னிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சீன அதிபர் ஜின்பிங், தொழிலாளர் கட்சியின் நம்பகமான தலைமை மற்றும் அவர்களின் சாதனைகள் குறித்து சீனா 'மிகவும் மகிழ்ச்சியடைகிறது' என்று கூறினார்.. கிம் ஜாங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், சீன அதிபர், "கொரிய தோழர்களுடனான சீன-கொரிய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்" என்று எழுதினார். மகிழ்ச்சி மற்றும் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க | சீன வைரஸை முற்றிலும் அழிப்பேன்... அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News