வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த ஏவுகணை இலக்கை நோக்கி தாக்கியதா என்று தென்கொரியா குறிப்பிடவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
மேலும், வடகொரியா விவகாரம் தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களிடமும் டிரம்ப் நேற்று போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அடுத்த வாரம் ஜெர்மனியில் ஜி-20 நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வட கொரியாவின் செயல்பாடுகள் குறித்து அங்கு விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.