ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளை சார்ந்தவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன.
சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குவர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் மருத்துவ படிப்புக்கான நோபல் பரிசு இன்று பிறபகல் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 4-ம் தேதி வேதியலுக்குமான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.