அடுத்த ஆண்டு முதல் புது கேஸ் கனெக்‌ஷன் கிடையாது! அதிர்ச்சியில் மக்கள்! காரணம் என்ன?

No new gas connections: 2024 முதல் எந்த ஒரு புதிய வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்படாது! அரசின் அதிரடி முடிவுக்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2023, 01:22 PM IST
  • புதிய கேஸ் கனெக்‌ஷன்கள் இனிமேல் கிடையாது
  • 2024 முதல் எந்த ஒரு புதிய வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்படாது!
  • விக்டோரியா மாகாண அரசின் அதிரடி முடிவு
அடுத்த ஆண்டு முதல் புது கேஸ் கனெக்‌ஷன் கிடையாது! அதிர்ச்சியில் மக்கள்! காரணம் என்ன? title=

உலகளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் அதன் விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மையால், உலகம் முழுவதும் நிலைமைகள் மாறிவருகின்றன. அந்த வரிசையில், 2024 முதல் எந்த ஒரு புதிய வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்படமாட்டாது என ஒரு மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது

இந்த முடிவை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் எடுத்துள்ளது. அம்மாகாண அரசு, 2024 முதல் புதிய வீடுகளுக்கான எரிவாயு இணைப்புகளை நிறுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. விக்டோரியா அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'ஜனவரி 1, 2024 முதல், புதிய வீடுகள் மற்றும் குடியிருப்பு உட்பிரிவுகள் மின்சார நெட்வொர்க்குடன் மட்டுமே இணைக்கப்படும்' என்று கூறியது.

அனைத்து புதிய பொதுக் கட்டிடங்களும் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும். இதில் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பிற கட்டிடங்களும் அடங்கும்.
 
முடிவிற்கான காரணங்கள்
உலகளாவிய ரீதியில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த முடிவை விக்டோரியா மாகாண அரசு  எடுத்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்டோரியா மாகாணம் தான், ஆஸ்திரேலியாவில் சமையல் எரிவாயுவை அதிகம் பயன்படுத்துகிறது.

சுமார் 80 சதவீத வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாகாண அரசின் உமிழ்வுகளில் எரிவாயு துறை, சுமார் 17 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம்.. அரபு நாடுகளிடம் கியாரண்டி கேட்கும் IMF!

'எரிவாயு விலை அதிகமாகும்'
இந்த முடிவு தொடர்பாக பேசிய  விக்டோரியா மாகாண அமைச்சர் லில்லி டி அம்ப்ரோசியோ, 'ஒவ்வொரு முறை எரிவாயு கட்டண பில் வரும்போதும், எரிவாயு விலை மேலும் அதிகரிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் அதிகமான மக்கள், தங்கள் ஆற்றல் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், ஆற்றல் மற்றும் வளங்களுக்கான சிறந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.

2045 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு குறைப்பு இலக்கை அடைவதற்கும், மாகாண மக்களை முழுவதுமான மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதற்கு ஆயத்தப்படுத்தும் முயற்சி இது என்று டி'அம்ப்ரோசியோ கூறுகிறார். மேலும், மின்சாரக் கட்டணத்திற்கான பணத்தை மிச்சப்படுத்துவதற்கும், எரிவாயுவை நம்பியிருப்பதைக் குறைப்பது இன்றியமையாதது என்பது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறுகிறார்.

இந்த முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விக்டோரியா மாகாணம், மானியங்கள் மற்றும் பல்வேறு பயிற்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது, இதில் 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($6.7 மில்லியன்) மதிப்பிலான சோலார் கருவிகள் மற்றும் வெப்பப் பம்புகளின் விலையைக் குறைக்கும் திட்டம் மற்றும் புதிய உபகரணங்களில் வர்த்தகர்களுக்குப் பயிற்சி அளிக்கும் 3 பயிற்சித் திட்டங்கள் உட்பட மின்மயமாக்கலை ஆதரிக்கும் திட்டங்களும் அடங்கும். 

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இணைய பாதுகாப்பை பராமரிப்பது முதல் செயல்பாடுகளை மாற்றுவது வரை கடினமான சவால்களை எதிர்கொள்கின்றன. வணிக இலக்குகளை அடைவதற்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் தொழில்நுட்பம் முக்கியமானது என்பதால், நிறுவனங்கள் அதற்கான செலவினங்களை அதிகரித்து வருகின்றன. இது நாளடைவில் எரிவாயுவின் விலையை மிகவும் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஒரே ஆண்டில் 80% விலை உயர்வு! விலை நிர்ணயக் கொள்கையை மாற்றும் மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News