இலங்கையிலும் மற்றும் பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடாக, வலர்ந்த நாடாக உள்ள, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் கடன் நெருக்கடி தான் உலகின் பேசுபொருளாக உள்ளது. கொரோனா ஊரடங்குகளால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை சரி செய்ய அமெரிக்க அரசு 900 பில்லியன் டாலர் செலவு செய்தது. இதனால் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வங்கி குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் வட்டியை உயர்த்தியது. இதனால் பல வங்கிகள் திவால் நிலையை சந்தித்தன. நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் சில திவாலான நிலையில், பல வங்கிகள் இன்னும் திவால் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா சந்தித்து கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்களின் வரிசையில் அடுத்ததாக வந்திருப்பது கடன் நெருக்கடி.
மேலும் படிக்க | என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்
பொருளாதார நிலைமை
அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக தற்போது, நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. உண்மையில், அமெரிக்க கடன் உச்சவரம்பு நெருக்கடி பற்றி அமெரிக்காவில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன, விரைவில் அமெரிக்கா ஏழை நாடாகி திவாலாகலாம் என கூறப்படுகிறது. கடனை திரும்ப செலுத்தாத நாடாக மாறக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது நடந்தால், அமெரிக்க வரலாற்றில் அந்த நாடு கடனை திருப்பி செலுத்தாத நாடாக மாறுவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 26.85 டிரில்லியன் டாலர் ஆகும். ஆனால், அந்நாட்டை 31.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கழுத்தை நெரிக்கிறது.
அமெரிக்காவின் மோசமான நிலை
தற்போது, அமெரிக்காவில் மிகக் குறைந்த பணமே மிச்சம் உள்ளது. தற்போது அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் பணத்தின் அளவு தொழிலதிபர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பை விட மிகக் குறைவு. நாட்டில் இப்போது $57 பில்லியன் ரொக்கம் மட்டுமே உள்ளது, இது கௌதம் அதானியின் சொத்து மதிப்பை விடவும் குறைவு. மறுபுறம், ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, அதானியின் நிகர மதிப்பு தற்போது $ 64.2 பில்லியன் ஆகும்.
கடன் வரம்பை அதிகரிக்க முயற்சி
அமெரிக்கக் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடனுக்கும் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பிடென் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர், மெக்கார்த்தி எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது, மெக்கார்த்தி சபாநாயகர் பதவியை வகிக்கிறார், ஏனெனில் அமெரிக்க நாடாளுமன்றம் கீழ்சபையில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. செனட்டில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அடுத்த 10 நாட்களில், அதாவது ஜூன் 1ம் தேதிக்குள், கடன் வரம்பை அதிகரிக்கவில்லை என்றால், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மட்டுமல்ல வெளிநாட்டில் வாங்கிய பத்திரங்களுக்கு கூட அமெரிக்க அரசால் பணம் கொடுக்க முடியாது.
நாடு கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருக்கலாம்
மறுபுறம், ஒவ்வொரு நாளும் 1.3 பில்லியன் டாலர் வட்டி செலுத்த வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது, அதன் பாதிப்பு நாட்டின் பங்கு சந்தையிலும் பார்க்க முடியும். இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையும் பின்னடைவைச் சந்தித்து நான்கு மணி நேரத்தில் 400 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜேனட் யெல்லனும் எச்சரித்து, இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட வேண்டும், இல்லையெனில் நாடு ஜூன் 1 ஆம் தேதி கடன் திருப்பிச் செலுத்த முடியாத நாடாக மாறும் என்று கூறினார்.
உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு
அதே நேரத்தில், ஜூன் 1ம் தேதி நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கா தொடர்ந்து மேலும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இப்போது அமெரிக்கா கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அமெரிக்கா மிகவும் பாதிக்கப்படலாம். கடனை செலுத்துவதில் அமெரிக்கா தவறினால், அது அமெரிக்காவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் பாதிக்கும்.
வேலை இழப்பு
அதே நேரத்தில், இதனால் அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. இதனுடன், பங்குச் சந்தையில் மோசமான விளைவு ஏற்படும் மற்றும் பங்குச் சந்தையும் வீழ்ச்சியடையும். அதே நேரத்தில், ஜிடிபி குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வேலையின்மையும் அதிகரிக்கலாம். சமீபத்தில், அமெரிக்காவிலும் வங்கி நெருக்கடி காணப்பட்டது, இப்போது கூட வங்கிகள் நஷ்டத்தை தாங்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ