இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் இன்று பதவியேற்றார். அதேவேளையில் வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்ராண பதவியேற்றார்.
இன்று மாலை நடைப்பெற்ற இந்த பதவி பிரமாணம் நிகழ்ச்சி அதிபர் கோட்டபய ராஜபக்ஷ முன்னிலையில் நடைப்பெற்றது. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
கடந்த வாரம் வெளியான தகவல்கள் படி இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விரும்புவதாக தெரிகிறது. இந்த மாதம் துவக்கத்தில் பொறுப்பேற்ற இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் பதவியேற்றவுள்ள மூன்று புதிய ஆளுநர்களில் முரளிதரண் ஒருவராக இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண ஆளுநராகவும், திஸ்ஸா வித்ராண வட மத்திய மாகாண ஆளுநராகவும் பொறுப்பேற்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.
New Governors for the Eastern (Ms. Anuradha Yahampath) and North Central Provinces (Prof. Tissa Vitharana) were sworn in before President Gotabaya Rajapaksa at the Presidential Secretariat this afternoon (04). pic.twitter.com/IXMVMdqFaE
— PMD News (@PMDNewsGov) December 4, 2019
ஜனாதிபதி செயலக வட்டாரகள் குறிப்பிட்ட தகவல்கள் படி தற்போது இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத், மற்றும் வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்ராண பதவியேற்றுள்ளனர். முன்பு வெளியான தகவல்கள் படி முத்தையா முரளிதரன் பதவி பிரமாணம் குறித்த தகவல் மட்டும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் எதிர்வரும் நாட்களில் அவரது பதவியேற்பு விழா உறுதிசெய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனுராதா யஹம்பத் தேசியவாத தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவராகவும் புகழ்பெற்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
திஸ்ஸா வித்ராணா முன்னாள் அமைச்சரும், லங்கா சம சமாஜா கட்சியின் தலைவருமானவர். அவர் நீண்ட காலமாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்தார், மேலும் வைரஸ் நோய்கள் குறித்த சிறப்பு மருத்துவராகவும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான போது முத்தையா முரளிதரன், கோட்டபய ராஜபக்ஷ-க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தார். மேலும், 2009-ல் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முரளிதனின் இந்த கருத்து இலங்கை தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த அவர்,... சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அத்தரணத்தில் அவர்கள்அப்பாவிகளை கொலை செய்தனர். எனவே முடிவிற்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக தான் கருதுவதாக குறிப்பிட்டார்.
இரு தரப்பும் தவறிழைத்தன, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். ஆனால் அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர், விடுதலை புலிகள் தங்கள் வாய்ப்பை தவறவிட்டதால் தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.