நேபாளத்தில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி... மேல் சபையை கூட்ட பிரதமர் ஒலி முயற்சி..!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் ஓலி (KP Sharma Oli) அவர்களின் பரிந்துரையின் பேரில்  நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து, இடைக்கால தேர்தலுக்கான தேதிகளையும் அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2020, 09:00 PM IST
  • நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது.
  • நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 13 ரிட் மனுக்களை நேபாள உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
  • பாராளுமன்றத்தை கலைப்பதற்கான திடீர் முடிவு குறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் கோரியது.
நேபாளத்தில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி... மேல் சபையை கூட்ட பிரதமர் ஒலி முயற்சி..!!! title=

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், பிரதமர் கே.பி. சர்மா ஓலி (KP Sharma Oli)  தலைமையிலான அரசு ஜனவரி 1 ம் தேதி நாடாளுமன்றத்தின் மேல் சபையின் குளிர்கால அமர்வை கூட்ட பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் ஓலி (KP Sharma Oli) அவர்களின் பரிந்துரையின் பேரில்  நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து, இடைக்கால தேர்தலுக்கான தேதிகளையும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

ஆளும் கட்சியின் ஒரு பிரிவினரும் எதிர்க்கட்சிகளும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பிரதமர் கே பி சர்மா ஓலிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேபாளத்தின் (Nepal) சுகாதார அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி ஒரு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனவரி 1 ம் தேதி நாடாளுமன்ற மேல் சபை கூட்டத்தொடரைக் கூட்ட அதிபருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 13 ரிட் மனுக்களை நேபாள உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஓலி அரசாங்கத்திற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான திடீர் முடிவு குறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் கோரியது.

நாடாளுமன்றத்தை (Parliament) கலைக்க நேபாள அரசியலமைப்பில் எந்த ஒரு அம்சமும் இல்லை, எனவே பிரதமர் கே.கே. பி.ஷர்மா ஓலிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக நேபாளத்தில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

ALSO READ | Snow Festival in China: மனதை கொள்ளை கொள்ளும் பனி சிற்பங்களை காணலாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News