இஸ்லாமாபாத்: கடந்த ஜூலை 28-ஆம் தேதி பனாம ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பை குற்றவாளி என கூறி பாகிஸ்தான் உச்சநீதிமண்றம் தீப்பளித்ததை அடுத்து அவர் பதவி விளகினார்.
பாகிஸ்தான் சட்டத்தின்படி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சித்தலைவர் பொறுப்பு வகிக்க இயலாது என்பதால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் பொருப்பில் இருந்தும் அவர் விலகினார்.
இந்நிலையில் அரசு ஊழியர்களை தவிர்த்து, எந்தவொரு நபரும் எந்தவொரு கட்சியிலும் பதவி வகிக்க முடியும் என தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்ற மேல்சபை சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது.
இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவானது நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.
Former Pakistani PM Nawaz Sharif re-elected as president of the ruling Pakistan Muslim League-Nawaz (PML-N): Pakistan Media (File Pic) pic.twitter.com/W4d6VHITPG
— ANI (@ANI) October 3, 2017
பின்னர் நடைப்பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பொதுக்குழு கூட்டதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சியில் பதவி வகிக்க தடை செய்யும் விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நவாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார்.
கட்சி விதிகளின்படி இன்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நவாஸ் ஷெரீப்பை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், நவாஸ் ஷெரீப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் நான்கு ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.