Mouth Buddies Kissing Trend : ஒரு வினோதமான நவீன டேட்டிங் நடைமுறை தற்போது சீனாவில் திடீரென தோன்றியுள்ளது. இதில், அறிமுக இல்லாத இருவர் தங்களுக்குள் 'முத்தம்' கொடுக்கிறார்கள். இந்த டிரெண்டை ஆங்கிலத்தில் 'Mouth Buddies' என்று அழைக்கின்றனர்.
அதாவது 'Mouth Buddies' என்றால் இரு நபர்கள் சேர்ந்து முத்தம் மட்டும் கொடுத்துக்கொள்ளலாம், ஆனால் காதலில் விழக்கூடாது. அதுமட்டுமில்லாமல், யார் என்றே தெரியாத அந்த நபரை ஒருமுறை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் இரண்டாம் முறை டேட்டிங் செல்லக்கூடாது. இதுதான் இந்த டிரெண்டின் அடிப்படை விதி.
கொஞ்சம் ஜோலியாக இருந்தாலும், அறிமுகமே இல்லாத ஒருவரை அதுவும் ஒரே ஒருமுறை மட்டும் முத்தம் கொடுத்துவிட்டு செல்வது என்பது மிக சங்கடமான ஒன்றுதான். ஆனால், இணையத்தில் இளைய தலைமுறை இந்த டேட்டிங் டிரெண்ட் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்
ஒரு சிலரோ கடும் எச்சரிக்கையும் விடுகின்றனர். 'Mouth Buddies' டிரெண்டில், சாலையில் அறிமுகம் இல்லாத நபரை முத்தமிடும்போது, இந்த டிரெண்ட் குறித்து புரியவைத்து, விளக்கமளித்த பின் செய்யவும் என்றும் ஏனென்றால் சிலரோ உங்கள் மீது உண்மையாகவே காதலில் விழுந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.
இந்த டிரெண்ட் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் சீனாவில்தான் தொடங்கியிருக்கிறது. அங்கு பலரும் இந்த 'Mouth Buddies' டிரண்டை கடைபிடித்து வருகின்றனர். இதுகுறித்து சீன பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறுகையில்,"எனக்கு தெரிந்த பலரும் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துவிட்டு, காதலிக்காமல் இருந்துள்ளனர். எனவே, முத்தம் என்பது மிகவும் பொதுவானது. அது பெரிய விஷயமல்ல.
மற்றொரு மாணவர் கூறுகையில், நிகழ்காலத்தை கொண்டாடுவதுதான் வாழ்க்கையில் மிக முக்கியமானது. ஒருவரை முத்தமிடும்போது, நான் காதலிப்பவரை முத்தமிடுவதை போன்ற எண்ண தோன்றுகிறது.
படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், இந்த டிரெண்டை நான் முயற்சித்து பார்த்தேன் என ஒரு மாணவி தெரிவித்துள்ளார். அதாவது, உடலுறவை விட முத்தம் கொஞ்சம் எளிமையானது என்பதால் பெண்களும் இதை அதிகமாக பின்பற்றி வருகின்றனர். இணைய தலைமுறை இந்த டிரெண்டை பல நாட்டிற்கும் கடத்தியுள்ளது.
மேலும் படிக்க | அமெரிக்காவில் கடும் பனிப்புயல்! 2200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ