Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம்

மீண்டும் பொருளாதாரம் தனது இயல்பு நிலைக்கு வரத் தொடங்கி, மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், ஒமிக்ரான பரவல் காரணமாக, மீண்டும் லாக்டவுன் கட்டுபாடுகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2022, 11:38 AM IST
Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம் title=

Super Variant of Coronavirus: கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக உலகின் வேகம் ஸ்தம்பித்துள்ள நிலையில், தினம் தினம் ஒரு மாறுபாடு தோன்றி உலகை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. 

மீண்டும் பொருளாதாரம் தனது இயல்பு நிலைக்கு வரத் தொடங்கி, மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், ஒமிக்ரான பரவல் காரணமாக, மீண்டும் லாக்டவுன் கட்டுபாடுகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஓமிக்ரான் காரணமாக கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. இந்தியாவில் 200 நாட்களுக்கும் பிறகு, மீண்டும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டி வருகின்றன. 

ALSO READ | Corona Virus: கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ‘இதை’ அருந்தினால் போதும்..!!!

இதற்கிடையில், மக்கள் மனதில் பீதியை அதிகரிக்கும் வகையில் டெல்டா மற்றும் ஓமிக்ரானின் கலவையான மாறுபாடு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 

சைப்ரஸில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மாறுபாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என ப்ளூம்பெர்க் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறதி. இந்த மாறுபாடு மிகவும் கொடிய வகையான  டெல்டா மற்றும் தொற்று  பரவல் அதிகமாக உள்ள ஓமிக்ரான் (Omicron) கலவையாகும் என்று கூறப்படுகிறது. சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் டெல்டாக்ரான் மாறுபாடு என குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய வகை மாறுபாட்டில்,  டெல்டா மாறுபாட்டின் மரபணுவிற்குள் ஒமேக்ரான் போன்ற மரபணு அம்சங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

ALSO READ | இங்கிலாந்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை: அச்சத்தில் மக்கள்

அறிக்கையின்படி, பேராசிரியர் கோஸ்ட்ரிகிஸ் மற்றும் அவரது குழுவினர் இதுவரை இந்த கலப்பு மாறுபாட்டின் 25 தொற்று பாதிப்புகளை. இந்த  மாறுபாடு எதிர்காலத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெரியவில்லை. பேராசிரியர் கோஸ்ட்ரிகிஸ் கூறுகையில், இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா மற்றும் தொற்றுநோயா இல்லையா மற்றும் முந்தைய இரண்டு வகைகளான டெல்டா மற்றும் ஓமிக்ரான்களுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு வலிமையானது என்பது போகப் போகத் தான் தெரியும் என்றார். 

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் புதிய ஆராய்ச்சியை வைரஸ் தரவுத்தளத்தை பராமரிக்கும் சர்வதேச நிறுவனமான GISAID க்கு அனுப்பியுள்ளனர். உலகம் முழுவதும் ஓமிக்ரான் வேகமாகப் பரவி வரும் வேளையில் டெல்டாக்ரான்  குறித்த செய்தி வந்துள்ளது. இந்தியாவில் தினமும் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவாகி வருகின்றன, அமெரிக்காவில் சராசரியாக 7 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் 6 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

ALSO READ | ஓமிக்ரானை ஓரங்கட்டி முன்னுக்கு வருகிறது புதிய IHU மாறுபாடு: பிரான்சில் 12 பேர் பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News