மெக்ஸிக்கோ: மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோரப் பகுதியில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!
வட அமெரிக்காவின் மெக்ஸிக்கோ-வில் 5.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நேரப்படி காலை 8:05 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜலிஸ்கோ மற்றும் கொலிமா மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பகுதிக்குஅருகே 19 மைல் (30 கி.மீ) தொலைவில் நிகழ்ந்தேரியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தில் பாதிப்புகள் ஏதும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜலிஸ்கோ மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதன் படி, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது!