Meta Layoffs : 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தயாராகும் மெட்டா நிறுவனம்!

சர்வதேச அளவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில்,  தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2023, 05:59 PM IST
  • Meta இந்த வாரம் மட்டும் குறைந்த பட்சம் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
  • மார்ச் மாதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வரும் மாதங்களில் 10,000 வேலைகள் குறைக்கப்படும் என அறிவித்தார்.
Meta Layoffs : 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தயாராகும் மெட்டா நிறுவனம்! title=

சர்வதேச அளவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில்,  தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். கூகுள், ட்விட்டர், அமேசான்உள்ளிட்ட பல்வேறு உலக நிறுவனங்கள்  கடந்த 10 மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். அதில் முக்கியமாக முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

இந்நிலையில்தற்போது மீண்டும் 10,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து வாட்ஸப், இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் மெட்டா சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்களில் உள்ள 10,000 ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | பேஸ்புக், இன்ஸ்டாவிற்கும் வருகிறது கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!

"இன்று மெட்டாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்ற துரதிர்ஷ்டவசமான செய்தியுடன் இன்று காலை எழுந்தேன். உங்களுக்கு ஏதேனும் தொழில் வாய்ப்புகள் இருந்தால், தயங்காமல் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! கடந்த 3 ஆண்டுகளாக  OpEx & headcount org செயல்திறனை அதிகரிப்பதில் நான் கவனம் செலுத்தி வந்தேன்," என்று Facebook நிறுவனத்தில் வணிக திட்ட மேலாளர் தெரசா ஜிமெனெஸ் பதிவிட்டுள்ளார்.

பல "தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப திட்ட மேலாளர்கள் துரதிர்ஷ்டவசமாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு ஏதேனும் வாய்ப்புகள் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும், நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று அவர் கூறினார்.

Meta இந்த வாரம் மட்டும் குறைந்த பட்சம் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நிறுவனம் வரும் மாதங்களில் 10,000 வேலைகள் குறைக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை அதாவது நிறுவனத்தின் 13 சதவீத பணியாளர்களை Meta பணிநீக்கம் செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு புதிதாக பெரிய அளவில் பணி நீக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த காலாண்டு முழுவதும் வேலைக்கு ஆள் எடுக்கும் நடவடிக்கையையும் மெட்டா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இனி குரூப் அட்மின்களுக்கு இந்த வசதிகளும் கிடைக்கும்! வாட்சப் அசத்தல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News