Medical Miracle: பன்றியின் இதயத்தை மனித உடலில் வைத்து அறுவை சிகிச்சை!!

அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஒரு பன்றியின் இதயத்தை, இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட, ஒரு மனிதருக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 11:16 AM IST
  • அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் ஒரு புதிய சாதனையை செய்துள்ளனர்.
  • ஒரு பன்றியின் இதயத்தை ஒரு மனிதருக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.
  • இது மருத்துவ அறுவை சிகிச்சையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
Medical Miracle: பன்றியின் இதயத்தை மனித உடலில் வைத்து அறுவை சிகிச்சை!! title=

கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள். மருத்துவர்களும் மருத்துவமும் மனிதர்களுக்கு சொல்லி அடங்கா நன்மைகளை செய்து வருகின்றன. பல பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளின் மூலம், மனித குலத்துக்கு பல உதவிகளை செய்து வருகின்றன. 

அந்த வகையில் அமெரிக்காவில் (America) உள்ள மருத்துவர்கள் ஒரு புதிய சாதனையை செய்துள்ளனர். அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஒரு பன்றியின் இதயத்தை ('porcine' heart), இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட, ஒரு மனிதருக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.

டெர்மினல் இதய நோயால் பாதிக்கப்பட்ட, மேரிலாந்தில் வசிக்கும் 57 வயதான ஒருவருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர். இதயம் மாற்றப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் நன்றாக இருபதாகக் கூறப்படுகிறது.

"நோயாளிக்கு தற்போது இதயம் கிடைக்கக்கூடிய ஒரே வழி இதுவாக மட்டும்தான் இருந்தது" என்று, வரலாற்று சிறப்புமிக்க  அறுவை சிகிச்சை செய்த பிறகு மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழகம் திங்களன்று (ஜனவரி 10, 2022) கூறியது. 

"மரபணு மாற்றப்பட்ட விலங்குகளின் இதயம், மனித உடலால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் மனித இதயத்தைப் (Heart) போல செயல்பட முடியும் என்பதை இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக நிரூபித்துள்ளது" என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாற்று அறுவை சிகிச்சை உயிர்காக்கும் பலன்களை வழங்குகிறதா என்பதை தீர்மானிக்க, டேவிட் பென்னட் என்ற அந்த நோயாளி, அடுத்த சில வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

நோயாளியின் மருத்துவ பதிவுகளை மதிப்பாய்வு செய்த UMMC மற்றும் பல முன்னணி மாற்று மையங்கள், அவர் வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக இருப்பதால கருதியதாக பல்கலைக்கழகம் கூறியது.

"ஒன்று மரணம், அல்லது, இந்த வகை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சி என்ற நிலை. இது இருட்டில் ஊசியைத் தேடுவது போன்ற பணி. ஆனால் இதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை" என்று கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த பென்னட், அறுவை சிகிச்சைக்கு முன் கூறினார்.

ALSO READ | Mankind Pharma: கொரோனாவுக்கு சவால் விடும் மருந்து! வெறும் 35 ரூபாய் மட்டுமே! 

பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிய பார்ட்லி பி க்ரிஃபித், இது ஒரு திருப்புமுனை அறுவை சிகிச்சை என்றும், உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதில் நம்மை இது அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

"நாங்கள் எச்சரிக்கையுடன் தொடர்கிறோம். ஆனால் இந்த வகையில் செய்யப்படுள்ள உலகின் இந்த முதல் அறுவை சிகிச்சை (Heart Operation) எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஒரு முக்கியமான புதிய விருப்பத்தை வழங்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கிரிஃபித் கூறினார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதன் விரிவாக்கப்பட்ட அணுகல் (கருணை பயன்பாடு) ஏற்பாட்டின் மூலம் புத்தாண்டு தினத்தன்று அறுவை சிகிச்சைக்கு அவசர அங்கீகாரத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவிரமான அல்லது உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலையை எதிர்கொள்ளும் நோயாளியின் மீது, சில சமயம் சில மருத்துவ அம்சங்கள், ஆராய்ச்சியைப் போல பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயாளிக்கு, பன்றியின் இதயம் அந்த ஆய்வுக்கான அம்சமாக இருந்தது. 

ALSO READ | Heart Attack: அதிக உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News