கரீபியன் நாடான ஹைதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் (Earthquake) அளவு ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே சுமார் 150 கிமீ தொலைவிலும், பெட்டிட் ட்ரூ டி நிப்ஸ் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
நிலநடுக்கம் காரணமாக மக்கள் தெருக்களில் குவிந்தனர். வீடுகளில் சிக்கியவர்கள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் பிற இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில், பொதுமக்களும் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவுக்கு உதவினர்.
ALSO READ: ஆப்கானை விட்டு வெளியேறும் தலைவர்கள்; காபூலை சுற்றி வளைத்த தாலிபான்கள்
இந்த பேரழிவு காரணமாக ஹைதி (Haiti) பிரதமர் ஒரு மாத கால அவசரநிலையை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணி பாதிக்கப்பட்டது.
இந்த கரீபியன் நாடு நெருக்கடியில் உள்ளது
கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக ஹைதி மக்களின் நிலை ஏற்கனவே மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அங்கு மக்களின் பிரச்சனைகள் இன்னும் அதிகரித்துள்ளன.
கொரோனா நோய்த்தொற்று மட்டுமல்லாமல், இன்னும் பல நெருக்கடிகளை இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே சந்தித்து வருகின்றனர். நாட்டு அதிபரின் படுகொலை, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய பிரச்சனைகளோடு தற்போது இந்த நிலநடுக்கமும் மக்களின் அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ALSO READ: ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ் படுகொலை தொடர்பாக 4 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR