ஜப்பானின் 'மூன் ஸ்னைப்பர்' சந்திர மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது, இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய உலகின் ஐந்தாவது நாடு ஜப்பான் என்ற பெருமையை அந்நாடு பெற்றது. ஆனால், ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக 'சாஃப்ட் லேண்டிங்' செய்த போதிலும் அதன் சூரிய மின்கலங்கள் போதுமான சக்தியை உருவாக்கவில்லைஎன்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (Japan Aerospace Exploration Agency (JAXA) கூறியுள்ளது.
/
配信スタート
小型月着陸実証機SLIMによるピンポイント月着陸運用の様子をJAXA相模原キャンパスからライブ配信中
\
#JAXA #SLIM #小型月着陸実証機 #SLIM月着陸ライブhttps://t.co/Q3SEf1Uq6C— JAXA(宇宙航空研究開発機構) (@JAXA_jp) January 19, 2024
'மூன் ஸ்னைப்பர்' கிராஃப்ட் நேற்று (ஜனவரி 19, வெள்ளிக்கிழமை) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக 'சாஃப்ட் லேண்டிங்' செய்த போதிலும், சோலர் பேனல்கள் ஏன் வேலை செய்யவில்லை என்பது தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும், ஸ்மார்ட் லேண்டர் ஃபார் இன்வெஸ்டிகேட்டிங் மூன் (Smart Lander for Investigating Moon (SLIM)) மூலம், நிலவில் தரையிறங்கிய உலகின் ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறியுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.
மூன் ஸ்னைப்பர்
நேற்றைய வெற்றிகரமான ஜப்பானின் மூன் ஸ்னைப்பர் திட்டம், இரண்டு தோல்விகளுக்கு பிறகே சாத்தியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 'மூன் ஸ்னைப்பர்' கிராஃப்ட் நிலவின் மேற்பரப்பில் 'பின்பாயிண்ட்' தரையிறக்கத்தை அடைய முயற்சித்தது. ஏற்கனவே இதேபோன்ற தரையிறக்கத்தை மேற்கொண்டது, ஆனால் அதன் வலுவான ஈர்ப்பு விசையின் காரணமாக சந்திரனில் இறங்க முடியவில்லை.
மேலும் படிக்க | சந்திரயான்-3 திட்டம்: ஒரு பார்வை
ஜப்பானின் மூன் ஸ்னைப்பர், நிலவில் உள்ள ஒரு பள்ளத்தில் நடைபெற்றது. மூன் ஸ்னைப்பர் என்று அழைக்கப்படும், SLIM அதன் இலக்கிலிருந்து 100 மீட்டர் (328 அடி) தூரத்தில் தரையிறங்கியது. நிலவின் துருவங்களில் உயிர்வாழ தேவையான ஆக்சிஜன், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவை இருக்கலாம் என்று நம்பப்படுவதால், மலைப்பாங்கான நிலவின் துருவங்களை ஆராய்வதில் எதிர்காலத்தில் சக்திவாய்ந்த கருவியாக மாறும் என்று JAXA கூறுகிறது.
தற்போது தரையிறக்கம் வெற்றிகரமாக இருந்தபோதிலும், இந்த பணி தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஜாக்ஸாவின் முழுமையான அமைதி மற்றும் உடனடி அறிக்கை எதுவும் இல்லாதது விண்கலம் விபத்துக்குள்ளாகிவிட்டதோ என்ற ஊகத்தை தூண்டியது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகே தரையிறங்கியதை நிறுவனம் உறுதிப்படுத்தியது.
SLIM "ஜனவரி 20, 2024 அன்று (ஜப்பான் நேரம்) காலை 00:20 மணிக்கு நிலவில் தரையிறங்கியது" என்பதை JAXA உறுதிப்படுத்தியது. "இறங்கியதில் இருந்து தகவல்தொடர்பு நிறுவப்பட்டது," "இருப்பினும், சூரிய மின்கலங்கள் சக்தியை உருவாக்கவில்லை மற்றும் சந்திர மேற்பரப்பில் இருந்து தரவு கையகப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது," என்று அது மேலும் கூறியது.
"SLIM ஆனது ஆன்-போர்டு பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகிறது. தரையிறங்கும்போது பெறப்பட்ட தரவு விண்கலத்தில் சேமிக்கப்படுகிறது, மேலும் இந்தத் தரவை முதலில் பூமிக்கு அனுப்புவதன் மூலம் அறிவியல் முடிவுகளை அதிகரிக்க நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம்" என்று JAXA தெரிவித்துள்ளது.
மனிதர்கள் நிலவில் இறங்கி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் சந்திரயான் நிலவின் தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்டது. ஆனால் இந்த முயற்சியை மேற்கொண்ட எல்லா நாடுகளுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ரஷ்யா, அமெரிக்க தனியார் நிறுவனமான ஆஸ்ட்ரோபோட்டிக் கூட நிலவில் இறங்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லை.
ஜனவரி 8 ஆம் தேதி வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட பிறகு, ஆஸ்ட்ரோபோட்டிக்கின் பெரெக்ரின் விண்கலம் வெடிப்பு மற்றும் எரிபொருள் கசிவால் பாதிக்கப்பட்டது. பெரெக்ரின் நிலவில் தரையிறங்க முடியாது என்று நிறுவனம் விரைவில் அறிவித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ