சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வானது சந்திர கிரகணம் என அழைக்க படுகிறது. இந்நிகழ்வானது நாளை (ஆகஸ்ட் 7) காலை நிகழும் என எதிர்பார்க்க படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூற்றின்படி நாளை காலை 10:52 மணியளவில் இந்தியாவில் சந்திர கிரகணத்தினை காணமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் எனவும் கூறியுள்ளார்.