Chinese magic: கடலில் கார்ப்பெட்| உள்ளுக்குள்ளே சுரங்கம்! இது சீன தந்திரம்!!

தொலைவில் இருந்து பார்த்தால், கடலில் மின்னும் கம்பளமாக தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கார்ப்பெட்! அதனுள்ளே இருப்பதோ சுரங்கப்பாதை என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 08:45 AM IST
  • உலகையோ அதிசயவைக்கும் சீனா
  • தொழில்நுட்ப ஜாம்பவானாக பிரம்மாண்டம் காட்டும் நாடு
  • நீருக்குள் நெடுஞ்சாலை அமைத்து சாதனை
Chinese magic: கடலில் கார்ப்பெட்| உள்ளுக்குள்ளே சுரங்கம்! இது சீன தந்திரம்!! title=

பெய்ஜிங்: சீனா நீருக்கடியில் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை கட்டியுள்ளது. இந்த நீருக்கடியில் உள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, சுமார் 11 கிமீ நீளம் கொண்டது, இது சீனாவின் தொழில்நுட்பத் திறனுக்கு மற்றுமொரு சான்றாக உள்ளது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹு ஏரியின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த சுரங்கப்பாதை கிழக்கே ஷாங்காய் நகரிலிருந்து 50 கி.மீ தொலைவு வரை செல்கிறது.

தொலைவில் இருந்து பார்த்தால், கடலில் மின்னும் கம்பளமாக தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கார்ப்பெட்! அதனுள்ளே இருப்பதோ சுரங்கப்பாதை (underwater highway tunnel) என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WTCS (@_peter__wang_)

வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்த 'டிராகன்', தனது தொழில்நுட்ப திறனின் அடிப்படையில், மிக நீளமான நீருக்கடியில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை (Underwater highway tunnel) கட்டி முடித்திருக்கிறது.

சுமார் நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை பொது மக்களின் நடமாட்டத்திற்காக திறக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை கட்டப்பட்ட காரணம் என்ன தெரியுமா? போக்குவரத்தை சீர் (Tranport regularisation) செய்வதாம்!  

ALSO READ | இது செவிலியரின் புதுமையான கண்டுபிடிப்பு 

மில்லியன் டாலர்கள் செலவில் கட்டுமானம்
 9.9 பில்லியன் யுவான் (சுமார் $1.56 பில்லியன்) செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் கட்டுமானம் 9 ஜனவரி 2018 அன்று தொடங்கியது. CNN இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இருபுறமும் போக்குவரத்தை கையாள 17.45 மீட்டர் அகலத்தில் ஆறு வழித்தடங்கள் உள்ளன. சுரங்கப்பாதை அமைக்க 2 மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது.

சிறப்பு வாய்ந்த சுரங்கப்பாதை 
இந்த சுரங்கப்பாதையின் மேற்கூரை வண்ணமயமான எல்இடி விளக்குகளால் (Light Decoration) அலங்கரிக்கப்பட்டுள்ளது, அவை ஓட்டுநர்களின் சோர்வைத் தடுக்கவும், அவர்களின் கண்களுக்கு ஆறுதலளிக்கவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை என்பதும், மிக குறுகிய காலத்தில் அதாவது நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வெள்ளத்தில் சிக்கிய பாதிரியாரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News