பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு

Liz Truss : பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி அடைந்தார்.   

Written by - Chithira Rekha | Last Updated : Sep 5, 2022, 06:26 PM IST
  • பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி
  • பிரிட்டனின் 3-வது பெண் பிரதமர் லிஸ் டிரஸ்
பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு title=

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் போரிஸ் ஜான்சன் தலைமை மீது அதிருப்தி எழுந்தநிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றார். இருப்பினும், அவரது தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து, போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒவ்வொருவராக வெளியேற, இறுதியாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது.

மேலும் படிக்க | பாரம்பரியங்கள் மாறுகின்றன! பிரிட்டன் புதிய பிரதமர் அறிவிப்பில் மாறும் மரபுகள்

இறுதியாக கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய வாக்களித்தனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 2-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், லிஸ் ட்ரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்கிற்கு 60,399 வாக்குகள் கிடைத்தன. 

இதனைத் தொடர்ந்து வெற்றி உரை ஆற்றிய லிஸ் ட்ரஸ், "கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைவதாகவும், நாட்டிற்கு தலைமை தாங்கும் பொறுப்பை தனக்கு வழங்கி தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி எனவும் குறிப்பிட்டார். இந்த கடினமான காலத்தில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டார்.

மார்க்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோருக்குப் பிறகு பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்; வெப்ப அலையால் துவண்டு விழும் மக்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News