வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் (Kim jong Un), தான் ஒரு கொடுங்கோலன் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதிபடுத்தி வருகிறார்.
அந்நாட்டு மக்களை பொறுத்தவரை, அதிபர் நினைப்பதை தான் பேச வேண்டும், அதிபர் சொல்படி தான் நடக்க வேண்டும். அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை கூட அவர்களால் முடிவு செய்ய இயலாது. அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது எல்லாம் அவர்கள் கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாத செயல்.
தற்போது, வட கொரிய சர்வாதிகாரி Kim jong Un, நாட்டின் கலாச்சாரத்தை காக்க புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். அந்நாட்டு மக்கள், தென்கொரிய கலைஞர்களின் நாடகங்களை பார்த்தாலோ அல்லது பாப் இசையை ஆர்வமாக கேட்டாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தென்கொரிய மக்களை பொறுத்தவரை, அவர்கள் வட கொரொய மக்களை போல் அல்லாமல் சுதந்திரமாக வாழ்பவர்கள். அங்குள்ள பிரபல பாடகரான K-Pop என்னும் கலைஞர், வட கொரிய மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறார்.
ALSO READ | தினமும் அழ பயிற்சி செய்யும் மக்கள்; வட கொரியாவும் அதன் வினோதங்களும்.!!
தென் கொரியாவின் நாடகங்கள், இசை, ஆகியவை ஆங்கிய கேஸடட்டுகள் ஆகியவை வட க்ரொரியாவில் புழங்க ஆரம்பித்துள்ளதே இதற்கு காரணம். இதனால், கோபம் கொண்ட கிம் ஜாங் உன், தென் கொரிய பாப் பாடகர் K-Pop, கலாச்சாரத்தை அளிக்க வந்த புற்று நோய் என்றும், வட கொரொய இளைஞர்கள் மனதை கெடுப்பவர் எனவும் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.
எனவே இதனை கண்டுகொள்ளாமல் விட்டால்,தென்கொரிய கலாச்சாரத்தை பின்பற்றி வடகொரியாவிலும் மக்களுக்கு சுதந்திரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆசை வந்துவிடும் என்பதால், கிம் ஜாங் உன் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னதாக தென்கொரிய இசை, நாடகங்களை பார்ப்பவர்கள் 15 ஆண்டுகள் வரை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதோடு, கடுமையான தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறிய மாற்றம் கொண்டுவரப்பட்டு, தென்கொரிய கலாச்சாரங்களை பின்பற்ற நினைப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR