காபூலில் குண்டு வெடிப்பு: 80 பலி, 350 பேர் காயம்; பிரதமர் மோடி கண்டனம்

Last Updated : May 31, 2017, 01:20 PM IST
காபூலில் குண்டு வெடிப்பு: 80 பலி, 350 பேர் காயம்; பிரதமர் மோடி கண்டனம் title=

ஆப்கானிஸ்தான் தலைகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூல் குண்டு வெடிப்பில் 80 பேர் கொல்லப்பட்டதாகவும் 350 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

 

இந்த குண்டு வெடிப்பில் தூதரகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

 

 

காபூலில் கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் தூதரக ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தூதரகம் அமைந்துள்ள இடம் அருகே புகை மூட்டமாக உள்ளது என்று ஏஎப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

 

 

இதில் இந்திய தூதரகத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில், ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இன்று காலை குண்டுவெடிப்பு நடந்தது. 

 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்தை ஒழிக்கும் ஆப்கானிஸ்தானின் போராட்டத்தில், இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

Trending News