Joe Biden on Nuclear Deal with Iran: சர்வதேச சமூகத்தை கவலையில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மீண்டுமொரு போருக்கான சாத்தியங்களை அமெரிக்க அதிபர் சூசகமாக தெரிவித்திருப்பது அரசியல் நிபுணர்களை கவலைக் கொள்ள செய்திருக்கிறது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரானுடனான ஒப்பந்தம் தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அணுவாயுத ஒப்பந்தத்திற்கு இரான் ஒத்து வராவிட்டால், இறுதி முயற்சியாக ‘சக்தி பிரயோகம்’ செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்தன, ஆனால் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.
மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி
நேற்று, (2022, ஜூலை 13) ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்ட "மாபெரும் தவறு" செய்தவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று குற்றம் சாட்டினார்.
அவருடைய அந்த மாபெரும் தவறே, தற்போது ஈரான் இப்போது அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு வராததற்கு காரணம் என்று ஜோ பிடன் கூறினார்.
இஸ்ரேலின் சேனல் 12 செய்திக்கு அளித்த பேட்டியின் அமெரிக்க அதிபர், இப்போது இருக்கும் ஈரானை விட, அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறினார். இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவிற்கு நான்கு நாள் பயணமாக ஜோ பிடன் செல்வதற்கு முன்னதாக அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அணுவாயுதத்தைப் பெறுவதில் இருந்து இரானைத் தடுக்க, ஆயுத சக்தியைப் பயன்படுத்துவது கடைசி வழியாகும் என்று கூறிய அதே நேர்காணலில், அமெரிக்க அதிபர் மற்றும் சில முக்கியமான விஷயங்களையும் பதிவு செய்தார்.
அமெரிக்காவின், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் (FTO) பட்டியலில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (IRGC) இன்னும் தொடர்வதை சுட்டிக்காட்டிய ஜோ பிடென், 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்த பிறகும் இந்த நிலை தொடர்வதை குறிப்பிட்டது பல விஷயங்களை குறிப்பாக உணர்த்துகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையை சாடிப் பேசிய தற்போதைய அமெரிக்க அதிபர், கடந்த ஆட்சியில், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை சீனாவ்ஓ அல்லது ரஷ்யாவோ நிரப்பும் நிலையை அனுமதிக்க முடியாது" என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | உக்ரைன் அணு ஆயுதத்தை உருவாக்குவதே தீர்வா
2015 அணுசக்தி ஒப்பந்தம்2015 ஆம் ஆண்டில், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்த ஆறு பெரிய வல்லரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. பொருளாதாரத் தடைகளில் இருந்து விடுபடுவதற்கு ஈடாக அணு ஆயுதத்தைப் பெறுவதை விட்டுக் கொடுக்க இரான் முன்வந்தது.
2018 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், மீண்டும் இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஒப்பந்தம் ஏற்பட்டதில் இருந்து அதுவரை ஒப்பந்தத்தை மதித்து வந்த இரான், டிரம்பின் முடிவுக்கு பிறகு, தானும் ஒப்பந்தத்தை மீறத் தொடங்கியது.
அன்றுமுதல் இதுவரை, ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் வியன்னாவில் தொடங்கிய பல்வேறு நிலையிலான பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்றது. மேலும், ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பூட்டும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா, மீண்டும் இரானுடன் மறைமுகமாக மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் பலப் பிரயோகம் தொடர்பான அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR