Jerusalem clashes: காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடைபெற்றன - இஸ்ரேலிய ராணுவம்

கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான வன்முறைகள் எல்லைப் பகுதியில் தீவிரமடைந்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 10, 2021, 10:24 AM IST
  • காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடைபெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது
  • Ashkelon நகர பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இரண்டு ராக்கெட்டுகள் ஏவப்பட்டன
  • இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் ஒன்று தடுக்கப்பட்டது
Jerusalem clashes: காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடைபெற்றன - இஸ்ரேலிய ராணுவம் title=

கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான வன்முறைகள் எல்லைப் பகுதியில் தீவிரமடைந்துள்ளன. 

மொத்தம் நான்கு ராக்கெட்டுகள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் (Israeli Defence Forces) கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) காசா பகுதியில் இருந்து Ashkelon நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இரண்டு ராக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கிறது.

நள்ளிரவுக்கு முன்னதாக மேலும் இரண்டு ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, ஆனால் அவை காசா பகுதிகளில் (Gaza Strip) தரையிறங்கின. "காசாவில் உள்ள பயங்கரவாதிகள் இஸ்ரேலை நோக்கி 2 ராக்கெட்டுகளை வீசினர். காசாவிற்குள் ராக்கெட்டுகள் வெடித்தன, அது பாலஸ்தீனிய பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்தன" என்று ஐடிஎஃப் (IDF) ட்வீட் செய்தது. 

Also Read | ஆவின் பால் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது ஏன்?

இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் (Iron Dome missile defence system) ஒரு தாக்குதல் தடுக்கப்பட்டது. இரண்டாவது தாக்குதல் மக்கள் தொகை இல்லாத வெட்டவெளிப் பகுதியில் தரையிறங்கியது. காயங்கள் மற்றும் சேதங்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை. 

முன்னதாக இஸ்ரேல் காசா பகுதியின் மீன்பிடி மண்டலத்தை மூடுவதாக அறிவித்திருந்தது. அதற்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாள் முழுவதும் இன்சென்ட்ரி பலூன்கள் மூலம் வெடிபொருட்கள் அனுப்பபப்ட்டன.

இன்சென்ட்ரி பலூன் என்பது உள்ளே எரிபொருள் அல்லது சிறிய வகை குண்டுகள் இருக்கும் பலூன்கள் ஆகும். இந்த பலூன்கள் வான்வெளியில் வெடிக்கும் போது, கீழே விழும் வெடிகுண்டுகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தும். இதனால் தெற்கு இஸ்ரேலில் டஜன் கணக்கான தீவிபத்துக்கள் நிகழ்ந்தன.

Also Read | Puducherry முதலமைச்சர் ரங்கசாமி க்கு கொரோனா பாதிப்பு உறுதி 

ஜெருசலேமில் ஏற்பட்ட மோதல்களுக்கு இடையே மேலும் 14 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக பாலஸ்தீனிய Red Crescent தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் குறைந்தது 560 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 

ஜெருசலேமில் மோதல்கள் தொடர்ந்து வருவதாகவும், ரமல்லாவிற்கு (Ramallah) அருகிலுள்ள மேற்குக் கரை சோதனைச் சாவடிகளில் பலர் கூடியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. 

மொத்தம் 70 பாலஸ்தீனியர்கள் ஷேக் ஜர்ராவிலிருந்து (Sheikh Jarrah) வெளியேற்றப்பட உள்ளனர். 1948 இல் இஸ்ரேல் நிறுவப்படுவதற்கு முன்னர் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் பாலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

Also Read | இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News