வாழைப்பழத்தை வெறுக்கும் ஆண் எலிகள்; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

Interesting Facts about Mice: வாழைப்பழத்தில் இருந்து வரும் வாசனையை போன்று, கர்ப்பிணி அல்லது பாலூட்டும் சுண்டெலியின் சிறுநீரில் வாசனை வீசுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2022, 03:27 PM IST
  • வாழைப்பழத்தைப் பார்த்தவுடன் ஆண் எலிகள் ஏன் ஓடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
  • வாழைப்பழ எண்ணெயை பருத்தி உருண்டைகளில் சேர்த்து பரிசோதனை
  • ஆண் சுண்டெலிகள் தங்கள் குஞ்சுகளைத் தின்று விடும் என்று பெண் எலிகளுக்கு அச்சம்
வாழைப்பழத்தை வெறுக்கும் ஆண் எலிகள்; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல் title=

ஆண் சுண்டெலிகள் வாழைப்பழத்தை வெறுக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இருப்பினும், பெண் எலிக்கு வாழ்ப்பழத்தின் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. கியூபெக்கின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆச்சர்மான விஷயத்தை ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர். 

விஞ்ஞானிகள் நடத்திய அய்வு ஒன்றில், வாழைப்பழத்தின் வாசனை ஆண் சுண்டெலிகளுக்கு பிடிக்காது என்பது தெரிய வந்தது. இதற்கான காரணம் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். வாழைப்பழத்தைப் பார்த்தவுடன் எலிகள் ஏன் ஓடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

ஆண் சுண்டெலியின் வெறுப்பிற்கான காரணம் 

ஆண் சுண்டெலிகள் எப்போது கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண் சுண்டெலிகளிடமிருந்து விலகியே இருக்கின்றன. ஏனென்றால், கர்ப்பிணிப் பெண் சுண்டெலிகளின் சிறுநீரில் உள்ள N-Pentyl Acetate என்ற பொருளால் எலிகள் பாதிக்கப்படுகின்றன. கர்ப்பிணி அல்லது பாலூட்டும் சுண்டெலியின் சிறுநீரின் வாசனை ஆண் எலிகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவை இந்த வாசனையால் அசௌகரியமாக உணர்வதால், அதனை விட்டு தூர  ஓட முயற்சி செய்கிறது.

மேலும் படிக்க |  கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

பாலூட்டும் சுண்டெலிகளின் சிறுநீரின் வாசனை

மே 20-ம் தேதி 'சயின்ஸ் அட்வான்ஸ்' இதழில் வெளியான ஆய்வறிக்கையில், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் சுண்டெலிகளின் சிறுநீரின் வாசனை, வாழைப்பழத்திலும் வருவதாகக் கூறுகிறது. வாழைப்பழத்தை எலிகள் வெறுக்க இதுவே காரணம் என கூறப்படுகிறது.

ஆய்வில் உள்ளூர் பல்பொருள் அங்காடியிலிருந்து வாங்கி வாழைப்பழ எண்ணெயை பருத்தி உருண்டைகளில் சேர்த்து ஆண் சுண்டெலிகளின் கூண்டுகளில் வைத்து விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொண்டனர். இது ஆண் சுண்டெலிகளின் மன அழுத்தத்தை அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்

இது தவிர பெண் சுண்டெலிகளும், ஆண் சுண்டெலிகளை தங்கள் குழந்தைகளிடம் இருந்து விலக்கி வைக்க இந்த வாசனையை பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண் சுண்டெலிகள் தங்கள் குஞ்சுகளைத் தின்றுவிடும் என்று பெண் எலிகளுக்கு அச்சமும் உள்ளது. ஏனென்றால், மற்ற ஆண் சுண்டெலிகள் எலிக்குஞ்சுகளை கொன்று தின்ன முயல்கின்றன.

வாழைப்பழத்தின் வாசனையால் கன்னி ஆண் சுண்டெலிகளுக்கு அதிக பிரச்சனைகள் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News