என்ன தான் நடக்கிறது வடகொரியாவில்.. வெளியுலகத்துடன் உறவை மேம்படுத்த Kim Jong Un சபதம்..!!

வெளி உலகத்தை பற்றி கவலையே படாத மனநிலை கொண்ட சர்வாதிகாரியான கிம் ஜாங் உன், தற்போது வெளி உலகிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேசி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 8, 2021, 01:54 PM IST
  • வெளி உலகத்தை பற்றி கவலையே படாத மனநிலை கொண்ட சர்வாதிகாரி கிம் ஜாங் உன்.
  • வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முக்கிய அரசியல் மாநாட்டில் உரையாற்றினார்.
  • கிம் தனது எதிரி நாடான தென் கொரியா உடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்ததாக கூறினார்.
என்ன தான் நடக்கிறது வடகொரியாவில்.. வெளியுலகத்துடன் உறவை மேம்படுத்த Kim Jong Un சபதம்..!! title=

வெளி உலகத்தை பற்றி கவலையே படாத மனநிலை கொண்ட சர்வாதிகாரியான கிம் ஜாங் உன், தற்போது வெளி உலகிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேசி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முக்கிய அரசியல் மாநாட்டில் உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், உலகத்துடனான தனது நாட்டின் உறவை  மேம்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

கிம் தனது எதிரி நாடான தென் கொரியா (South Korea)  உடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்ததாக கூறினாலும், என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறார் என்று விரிவாகக் கூறவில்லை என்றும் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

உள்நாட்டில் பெரிய அளவில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில், சியோல் மற்றும் வாஷிங்டன் உடனான உறவை மேம்படுத்தும் முயற்சியாக சில அறிவிப்புகளை கிம் ஜாங் உன் (Kim Jong Un) வெளியிடுவார் என அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.

கடந்த கால திட்டங்களை மறுஆய்வு செய்வது, புதிய முன்னுரிமைகள் குறித்து ஆலோசனை செய்வது மற்றும் உயர் அதிகாரிகளை மாற்றியமைப்பது ஆகியவை குறித்து கட்சியின் உயர்மட்ட குழு முடிவெடுக்கும்.

ALSO READ | Kim Jong Un: கொரோனாவே இல்லைன்னா.. தடுப்பூசி எதுக்கு பாஸ்.. சொல்லுங்க..!!

தொற்று பரவலை தடுக்க எல்லைகளை மூடி வைத்தது, தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகள் மற்றும்  அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் என பல விதங்களில் வட கொரியா நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த உயர் மட்ட அரசியல் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது தொடக்க நாள் உரையில், கிம் தனது முந்தைய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தோல்வியடைந்ததை ஒப்புக் கொண்டார், மேலும் ஒரு புதிய ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தை வகுப்பதாக உறுதியளித்தார்.

கூட்டத்தின் இரண்டாவது நாளில், அவர் தனது நாட்டின் இராணுவ திறனை உயர்த்துவேன் என்று கூறினார்.

ஜனவரி 20 ம் தேதி பதவியேற்கவுள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், கிம் ஒரு "குண்டர்" என்றும் வடகொரியா அணுசக்தி மயமாக்கல் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருடன் நேரடி சந்திப்பு நடத்த வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கால கட்டத்தில், டிரம்புடன் கிம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா (America) வட கொரியா இடையிலான உறவுகள் வளர்ந்தன.

ஆனால் பியோங்யாங் சியோலுடனான பரிமாற்றங்களை நிறுத்தியதுடன், 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வியட்நாமில் டிரம்புடன் கிம் மேற்கொண்ட இரண்டாவது உச்சிமாநாடு தோல்வி அடைந்ததை அடுத்து, டிரம்ப வட கொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தார்

பிடென் நிர்வாகத்துடன் ஒரு நல்லிணக்க மனநிலையை மேம்படுத்த வட கொரியா முதலில் தென் கொரியா உதவியுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென் கொரிய அதிகாரிகள் கிம்-ஐ சந்தித்து, பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயங்களுக்கு ஈடாக தனது அணுசக்தி திட்டம் நோக்கத்தை கைவிட தயாராக இருப்பதாக வாஷிங்டனுக்கு தெரிவித்த பின்னர் தடைபட்டிருந்த கிம்-டிரம்ப் பேச்சு வார்த்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வன்முறை சம்பவங்கள் என்னை ஆத்திரமடைய செய்துள்ளன: Donald Trump

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News