Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் பேரணியில் கலந்துக் கொண்டபோது, திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது காலில் இருந்து 3 தோட்டாக்களை எடுத்ததாகவும், தன்னைக் கொல்வதற்காக 2 மாதங்களுக்கு முன்பே சதி திட்டம் தீட்டப்பட்டது என்று இம்ரான் கான் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு எதிரான தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகக் கூறினார்.
And they think they can get away with a joke of an FIR? Our leader got shot, everyone behind this cowardly attack will have to pay for this ... sooner or later! We will never accept this weak FIR! #FIR_Rejected pic.twitter.com/GTkYdvRsaI
— PTI (@PTIofficial) November 7, 2022
'என் காலில் இருந்து 3 தோட்டாக்கள் எடுக்கப்பட்டது; 2 மாதங்களுக்கு முன்பே சதித் திட்டம் தீட்டப்பட்டது' என இம்ரான் கான் அளித்த பேட்டி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் இம்ரான் கான், லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து, CNN செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். "எனது வலது காலில் இருந்து மூன்று தோட்டாக்களை எடுத்தனர். இடதுபுறத்தில் சில துண்டுகள் இருந்தன, அதை மருத்துவர்கள் உள்ளே விட்டுவிட்டனர்" என்று இம்ரான் கான் கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இம்ரான் கானை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக நிருபர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இம்ரான் கான், புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்படுவது தொடர்பான தகவல்கள் தெரிந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் இந்து சமூகத்தினரின் நிலை என்ன? இந்துக்களின் கலாச்சாரமும் உரிமைகளும்
படுகொலை சதி
"மூன்றரை ஆண்டுகள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். உளவுத்துறை அமைப்புகளுடன், செயல்படும் பல்வேறு அமைப்புகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது," என்று, தனக்கு, சதித்திட்டம் தொடர்பாக தகவல் கிடைத்தது தொடர்பாக இம்ரான் கான் தெரிவித்தார்.
இம்ரான் கான், தனக்கு எதிரான முழுப் படுகொலை சதியும் இரண்டு மாதங்களுக்கு முன்பே உருவானது என்றும், இம்ரான் கான் CNN உடனான பேட்டியை மேற்கோள்காட்டி ARY நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "நான் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது தொடங்கிய சதி இது, நான் பதவியில் இல்லை என்ரால் எனது கட்சி வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதற்கு பதிலாக எனது கட்சிக்கு மகத்தான ஆதரவைப் பெற்றது," என்று இம்ரான் கான் கூறினார்.
மேலும் படிக்க | புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான்
தற்போதைய அரசாங்கம் தன் மீதான தாக்குதலைத் திட்டமிட்டதாக கூறும் இம்ரான் கான், ஆனால், அரசு அதை, "ஒரு மதவெறியர் அதைச் செய்தார்" என நிரூபிக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டுவதாக ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
"இது ஒரு திட்டமிட்ட படுகொலை முயற்சி. இப்படித்தான் நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்தது" என்று அவர் மேலும் கூறினார். முன்னதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதம் எழுதிய இம்ரான் கான், தன் மீதான தாக்குதல், "அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு மீறல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!
மேலும் படிக்க | பாகிஸ்தானில் அவசர நிலையா...? இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப தடை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ