விமான கோளாறு காரணமாக நியூயார்க் திரும்பினார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது தூதுக்குழு இஸ்லாமாபாத்திற்கு திரும்பிச் செல்லும்போது, அவர்களது விமானம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நியூயார்க்கிற்கு திரும்பினர்!

Last Updated : Sep 28, 2019, 02:27 PM IST
விமான கோளாறு காரணமாக நியூயார்க் திரும்பினார் இம்ரான் கான்! title=

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது தூதுக்குழு இஸ்லாமாபாத்திற்கு திரும்பிச் செல்லும்போது, அவர்களது விமானம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நியூயார்க்கிற்கு திரும்பினர்!

இம்ரான் கான் மற்றும் அவரது குழு, நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை சவுதி அரேபியா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விமானத்தில் புறப்பட்டனர். 

முன்னதாக இம்ரானா பார்த்த ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மாலீஹா லோதி மீண்டும் விமான நிலையத்திற்கு விரைந்ததாக செய்தி நிறுவனம் IANS குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் பிழையை சரிசெய்ய முயன்றபோது கான் சிறிது நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தார் எனவும், பின்னர் கோளாறை சரி செய்ய நீண்ட நேரம் தேவைப்படும் என்பதால், சனிக்கிழமை காலைக்குள் அதை முடிக்க முயற்சி எடுகப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளின் கூற்றுப்படி, சனிக்கிழமை காலை விமானம் சரி செய்யப்படாவிட்டால், கான் மீண்டும் வர்த்தக விமானத்தில் பாகிஸ்தானுக்கு செல்வார் என தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது அமர்வில் (UNGA) கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நியூயார்க் சென்றார். 

UNGA-வில் தனது முதல் தோற்றத்தில், கான் அரை மணி நேரத்திற்கும் மேலாக சிவப்பு ஒளியுடன் தொடர்ந்து ஒளிரும் வகையில் பேசினார். அவர் தனது இந்திய எதிர்ப்பு சொல்லாட்சியைத் தொடர உலகளாவிய தளத்தைப் பயன்படுத்தினார்.

இருப்பினும், பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையாக பதிலளித்தது. கானின் பேச்சுக்குப் பிறகு, பதிலளிக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. தனது நேரத்தின் போது "பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளுமா?" இந்தியா கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Trending News