குடும்பத்தில் தகராறு வருவது இயல்பானதுதான். ஆனால், கோபத்தில் மனைவியின் தலையை வெட்டுவதும், அதைத் தூக்கிக் கொண்டு தெருவில் வலம் வருவதும் கொடூரத்தின் உச்சம்.
ஆணவக்கொலை என்பது காதல், சாதியின் அடிப்படையில் மட்டுமல்ல, நடத்தையில் ஏற்படும் சந்தேகமும் இப்படிப்பட்ட கொடூரங்களுக்கு காரணமாக இருக்கிறது.
ஆணவக்கொலை கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தொடரும் கொடுமை. இரானில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணை அவரது கணவரும், கணவரின் சகோதரரும் வெட்டிக் கொன்றனர்.
துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் சுற்றித் திரிந்த கணவரின் வீடியோ வைரலானதை (Viral Video) அடுத்து ஈரானில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Mona Heidari 17 yo was beheaded by her husband on Feb. 5 in #Ahvaz,SW #Iran.
She was mother of a 3yr old boy&was forced to marry her cousin when she was 12 yo.
She fled to Turkey to get away from her husband's violence.
Violence against women has never been criminalized in Iran. pic.twitter.com/CJ1smd4uIi— Mitra Motamed (@MitraMotamed) February 7, 2022
தகவல்களின்படி,சனிக்கிழமையன்று தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு இருப்பதான சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் மற்றும் மைத்துனர் கொலை செய்தனர்.
கொல்லப்பட்ட பெண்ணுக்கு திருமணம் ஆகும்போது 12 வயது தான் என்றும், அவருக்கு தற்போது மூன்று வயதில் மகன் இருப்பதாகவும் ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
ALSO READ | துருக்கியில் 'நரகத்தின் நுழைவாயில்' என அழைக்கப்படும் கிரேக்க கோயில்
கொலை செய்த கணவரையும், அவரது சகோதரரையும் போலீஸ் அதிகாரிகள் கைது செய்துவிட்டதாக ஈரானின் செய்தி நிறுவனமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதை குடும்பத்தினர் கண்டுபிடித்துவிட்டனர். அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் 17 வயது மோனா ஹெய்டாரி துருக்கிக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்தப் பெண்ணின் தந்தையும், அவரை கண்டுபிடித்து மீண்டும் ஈரானுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சியும் கவலையும் அளிக்கும் சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. பெண்களை பாதுகாக்க "அவசர நடவடிக்கைகளை" எடுக்குமாறு இரானின் ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவரான என்சீஹ் கசாலி நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ALSO READ | ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்
ஆணவக் கொலையால் அதிர்ச்சியடைந்துள்ள ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் நாட்டில் அவசர சட்ட சீர்திருத்தங்களின் அவசியத்தையும் அனைவரும் விவாதித்து வருகின்றனர்.
சமூக நம்பிக்கைகள் மற்றும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டால் அவரை கொல்லும் கணவனுக்கு தண்டனை இல்லாதது போன்ற தளவர்வான சட்டங்களால் அந் நாட்டின் சில பகுதிகளில் கவுரவக் கொலைகள் பரவலாக உள்ளன.
ஈரான் நாட்டின் அரசியலமைப்பின் 630வது பிரிவு, திருமணத்தைத் தாண்டி தொடர்பு வைத்திருக்கும் மனைவியை கொலை செய்யும் கணவனுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது.
ALSO READ | ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்
ஷரியா சட்டத்தின்படி (Sharia law), "ரத்த சொந்தங்கள்" (நேரடியான குடும்ப உறுப்பினர்கள்) மட்டுமே தங்கள் உறவினர்களை கொலை செய்ததற்காக மரணதண்டனை வழங்கக் கோர முடியும்.
இதுதான், உண்மையிலுமே கவுரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும், அதை பிடிக்காதவர்களாலும்கூட அந்நாட்டில் ஆணவக்கொலைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாததற்குக் காரணம்.
ஏனென்றால், மற்றொரு குடும்ப உறுப்பினருக்கு கடுமையான தண்டனையை யாரும் கோர மாட்டார்கள் என்பதால், ஈரானில் பெரும்பாலும் கவுரவக் கொலைகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதே இதன் பொருள் என்பது, அந்நாட்டு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் எழுவதற்கு அடிப்படையாக உள்ளது.
ALSO READ | திருமணத்துக்கு முன் பெண்களுக்கு இந்த சோதனை, தடுப்பூசிக்கான ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR