ரோம்: Homes On Sale- ஒரு காலத்தில் பிக்காரி நகரத்தில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது என்று அந்நகர மேயர் கூறினார். வேலைகள் அல்லது வேறு காரணங்களால் மக்கள் இந்த பகுதியை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்.
நீங்கள் இத்தாலியில் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், இதைவிட சிறந்த வாய்ப்பு இல்லை என கூறலாம். ஏனென்றால், நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வீடுகள் மிகவும் மலிவாக கிடைக்கும். ஆனால், வீடுகள் மிகவும் பழைய வீடுகள், அவை புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த வீடுகள் புக்லியாவின் தென்கிழக்கில் பிக்காரியில் விற்பனைக்கு வந்துள்ளன. நகரின் மேயர் ஜியான் பிலிப்போ மிக்னெகன் இந்த வீடுகளை ஒரு சிறப்பு திட்டத்தின் விற்பனை செய்கிறார். இந்நகரத்தை விட்டு மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால், அதைத் தடுக்க அவர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்
வேலை காரணமாக ஊரை விட்டு வெளியேறும் மக்கள்
Biccari (Italy) நகரில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகம். இருப்பினும், இந்த வீடுகள் மிகப் பழைய வீடுகள் வெறும் 1 யூரோவுக்கு(ரூ .88) க்கு விற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக மக்கள் பிற இடங்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டனர். இதன் காரணமாக நகரம் காலியாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மேயர் கியான்ஃபிலிப்போ மிக்னோக்னா சிறப்பு சலுகை வீடுகளை விற்கும் திட்டத்தை வகுத்துள்ளார்.
இப்பகுதியில் 2000 பேர் மட்டுமே உள்ளனர்
ஒரு காலத்தில் பிக்காரியில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது என்று மேயர் கூறினார். வேலைகள் அல்லது வேறு காரணங்களால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கு முன்பு விடுமுறை காலத்தில் இங்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் முற்றிலுமாக நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள் இதனால் பல வீடுகள் காலியாக உள்ளன. வீடுகள் குறித்த தகவல்கள் விரைவில் டவுன்ஹால் வலைத் தளத்தில் வெளியிடப்படும். இருப்பினும், வீடு வாங்க விரும்புவோர் மேயரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்.
உத்தரவாதம் தொகை அளிக்க வேண்டும்
வீட்டு விற்பனைக்கு மொத்தம் இரண்டு திட்டங்களை மேயர் தயார் செய்துள்ளார். முதல் திட்டத்தில் வீடுகளின் விலை ஒரு யூரோ. இரண்டாவது திட்டம் இதை விட மலிவானது. 1 யூரோ தொகையில் ஒரு வீட்டை வாங்க விரும்புவோர் முதலில் 3000 யூரோக்களை உத்தரவாத தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் வீடு பழுதுபார்க்கும் பணிகளைச் செய்தபின் இந்த தொகை அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். பிக்காரி ஒரு அழகான நகரம். இந்த நகரத்தின் எல்லையானது புக்லியா, மோலிசா மற்றும் காம்பானியா. இங்கிருந்து அழகான நதி மற்றும் மலைத்தொடர்களைக் காணலாம்.
ALSO READ | BBC தொலைக்காட்சிக்கு சீனாவில் தடை.. காரணம் என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR