ஆப்கானிஸ்தானில் கனமழை: 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது

வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இறந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 08:11 PM IST
  • வெள்ளப்பெருக்கில் இறந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது.
  • 600 க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
  • இதுவரை 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்துளன.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் நிதியுதவி
ஆப்கானிஸ்தானில் கனமழை: 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது title=

Afghanistan Floods News காபூல்: ஆப்கானிஸ்தானின் பல மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் (Afghanistan Floods) பேரழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 122 பேர் இறந்துள்ளனர் மற்றும் 147 பேர் காயமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடர்பாடுகளில் விக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கூடும் எனத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் தொடர்ச்சியான மழை காரணமாக, பல மாநிலங்களில் வெள்ள பெருக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு பல நகரங்களில் ஏற்பட்ட வெள்ளம் கபீசா, காபூல், வர்தக், பக்தியா, கோஸ்ட் உள்ளிட்ட பல நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. அவர்களில், பர்வன் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  ஆஃப்கானிஸ்தானில் பெற்றோரின் கொலைக்கு உடனடியாக பழி வாங்கிய வீர மகள்!!

வெள்ளப்பெருக்க நிலைமையைச் சமாளிக்க, பேரழிவு மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் ஆப்கானிய இராணுவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன. இதுவரை 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்துளன. பலத்த மழை காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர்களில் பயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டது. 600 க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை துணை அமைச்சர் முகமது காசிம் ஹைதாரி (Mohammad Qasim Haidari), மீட்பு குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடிந்து விழுந்த வீடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக இன்னும் பணியாற்றி வருவதால் விபத்து எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றார்.

ALSO READ | மழை வருமா... வராதா.... என்ன சொல்லுது வானிலை ஆய்வு மையம்..!

வீடியோ கான்பரன்ஸில் பேசிய ஆப்கானிஸ்தான் அதிபத் அஷ்ரப் கானி (Ashraf Ghani), வீடுகளையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்தவர்களுக்கு முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

Trending News