கொழும்பு (Colombo): இலங்கையின் (Sri Lanka) மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களை (voters) ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத குழு இன்று (சனிக்கிழமை) கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இலங்கையில் இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான (Sri Lanka presidential election) வாக்களிப்பு நடைபெறுகிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுதுகிறோம். துப்பாக்கிச் சூடு இலங்கை போலீஸ் செய்தித் தொடர்பாளர் தகவலை தெரிவித்தார்.
செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, "அடையாளம் தெரியாத குழு முதலில் பஸ் மீது கற்களை வீசியது. இதனால் பஸ்ஸின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தது. பின்னர் அவர்கள், பின்னால் இருந்த இரண்டாவது பஸ் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பேருந்துகள் பலத்த சேதமடைந்தன என்று இலங்கை போலீ கூறியதாக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைவதற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய குழு, அங்கிருந்து தப்பித்து விட்டதாகவும், அதன் பிறகு வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது அண்டை நாடான இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக்கியமாக ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (United National Party) சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa), இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி (Sri Lanka Freedom Party) கோட்டபய ராஜபக்ஷவுக்கும் (Gotabaya Rajapaksa) இடையே முக்கியமாக போட்டியாக அமைந்துள்ளது. ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடு தழுவிய வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 12,845 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும்.
சுமார் 16 மில்லியன் இலங்கையர்கள் தங்கள் உரிமையான வாக்களிக்க உள்ளனர். ராஜபக்ஷ மற்றும் பிரேமதாசாவைத் தவிர, மற்ற முக்கியமான வேட்பாளர்கள் மார்க்சிஸ்ட் ஜனத் விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி) அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் அனுரா குமாரா டிசெனாயகா மற்றும் தேசிய மக்கள் இயக்கத்தின் (என்.பி.எம்) மகேஷ் சேனநாயக்க ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதற்காக இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இலங்கையின் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களும், முஸ்லிம்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்காற்ற உள்ளனர். அதாவது ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான போட்டியை தீர்மானிப்பதில் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க இலங்கை போலீஸ் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.