QUAD நாடுகளின் மாணவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த நற்செய்தி

உலகளாவிய விநியோகத்தை அதிகரிப்பதற்காக இந்தியாவில் 1 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய குவாட் தடுப்பூசி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பைடன் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 02:00 PM IST
  • அமெரிக்காவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையிலான குவாட் உச்சி மாநாடு.
  • வாஷிங்டனில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைவர்களுடன் குவாட் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
  • இந்த தருணத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாகக் கூடியுள்ளோம்-ஜோ பைடன்.
QUAD நாடுகளின் மாணவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த நற்செய்தி title=

வாஷிங்டன் டிசி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையிலான குவாட் உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. குவாட் அமைப்பின் சிறந்த முன்னேற்றத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24, 2021), உறுப்பினர் நாடுகளின் மாணவர்களுக்கு "ஸ்டெம் புரோகிராம்களில்" மேம்பட்ட இளங்கலைப் பட்டப்படைப்பை படிக்க புதிய "பெல்லோஷிப்" திட்டத்தை அறிவித்தார்.

குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் அதிபர் பைடன் (Joe Biden) தனது தொடக்க உரையில், இது உலகக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்ட ஜனநாயகப் பங்காளிகளின் குழுவாகும் என்று கூறினார். "இந்த தருணத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாகக் கூடியுள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"ஆறு மாதங்களுக்கு முன்பு நாம் சந்தித்தபோது, ​​தடையற்ற மற்றும் அனைவரும் அணுகக்கூடிய இந்தோ-பசிபிக்கான பகிரப்பட்ட மற்றும் நேர்மறையான நிகழ்ச்சி நிரலுக்கு உறுதியான உறுதிமொழிகளை அளித்தோம். இன்று நாம் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

உலகளாவிய விநியோகத்தை அதிகரிப்பதற்காக இந்தியாவில் 1 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய குவாட் தடுப்பூசி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பைடன் கூறினார்.

"இன்று, ஒவ்வொரு குவாட் நாடுகளிலிருந்தும் மாணவர்களுக்கு அமெரிக்காவின் முன்னணி ஸ்டெம் பாட திட்டங்களில் மேம்பட்ட இளங்கலை படிப்பிற்காக ஒரு புதிய குவாட் பெல்லோஷிப்பை நாங்கள் தொடங்குகிறோம். இது நாளைய தலைவர்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோடிகளின் முதலீட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்று அமெரிக்க அதிபர் கூறினார் .

ALSO READ: PoK-வை முதலில் காலி செய்யுங்கள்: UNGA-வில் பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டமான பதில்

நான்கு நாடுகளின் (இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவாட் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாஷிங்டனில் அமெரிக்கா, ஜப்பான் (Japan) மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைவர்களுடன் குவாட் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அனைத்து தலைவர்களுக்கும் விருந்தளிக்கிறார்.

ஆதாரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளின்படி, இன்றைய உச்சி மாநாடு 5 ஜி தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், முக்கியமான உள்கட்டமைப்பு, விநியோகச் சங்கிலிகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

முன்னதாக, இன்று பிரதமர் மோடியும் (PM Modi)அமெரிக்க அதிபர் பைடனும், பைடன் பதவியேற்ற பிறகு தங்கள் முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். வர்த்தகம், கோவிட் -19, காலநிலை சவால்கள் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

வெள்ளை மாளிகையில் பைடனை சந்தித்த பிரதமர் மோடி, தனது தொடக்க உரையில் இருதரப்பு உச்சிமாநாடு முக்கியமானதாக இருந்தது என்றும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்னும் வலுவான நட்புக்கான விதைகள் விதைக்கப்பட்டன கூறினார்.

ALSO READ: இந்தியாவின் தடுப்பூசி போடும் வேகம் வியப்பளிக்கிறது: கமலா ஹாரிஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News