இலங்கையில் தாக்கிய புயலால் 4 பேர் பலி!

இலங்கையில் தாக்கிய புயலால் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேரைக் காணவில்லை. 

Last Updated : Nov 30, 2017, 05:41 PM IST
இலங்கையில் தாக்கிய புயலால் 4 பேர் பலி! title=

இலங்கை அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று புயலாக மாறி இலங்கையை தாக்கியது. இதன் காரணமாக இலங்கை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

இந்த புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், மீனவர்களுடன் மொத்தம் 23 பேரைக் காணவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர்.  

கொழும்பில் இருந்து 200 கி.மீ. நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 150 மிமீ மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Trending News