Facebook Vs Australia: மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்கிறது ஆஸ்திரேலியா..!!

ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் சமூக ஊடக தளமான பேஸ்புக்கிற்கும் இடையே பல நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட ஊடகச் சட்டங்களை மாற்றப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய அரசு உறுதியாக அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2021, 06:38 PM IST
  • பேஸ்புக் அதிகாரிகள் சென்ற வார இறுதியில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் சட்டத்தில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து விவாதித்தனர்.
  • ஊடகச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், பேஸ்புக் செய்தி உள்ளடக்கத்திற்கான ராயல்டி தொகையை செய்தி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

Trending Photos

Facebook Vs Australia: மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்கிறது ஆஸ்திரேலியா..!! title=

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி  செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை அடுத்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன. 

புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும்  அச்சுற்றுத்தல் விடுத்தது. எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
முன்னதாக, ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google)  தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

ஆஸ்திரேலிய  (Australia) அரசாங்கத்துக்கும் சமூக ஊடக தளமான பேஸ்புக்கிற்கும் இடையே பல நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட ஊடகச் சட்டங்களை மாற்றப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய அரசு உறுதியாக அறிவித்துள்ளது.

ஊடகச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், பேஸ்புக் மற்றும் ஆல்பாபெட் இன்கார்பரேஷனின் கூகிள் செய்தி உள்ளடக்கத்திற்கான ராயல்டி தொகையை செய்தி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

பேஸ்புக் (Facebook) அதிகாரிகள் சென்ற வார இறுதியில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் சட்டத்தில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து விவாதித்தனர்.

இப்போது, இந்த மசோதா திங்களன்று செனட்டில் ஒரு விவாதத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் சைமன் பர்மிங்காம், இதற்குப் பிறகு இந்த மசோதாவில் இனி திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உன்னிப்பாக இந்த விஷயத்தை கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Facebook Vs Australia: பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார் ஆஸ்திரேலிய பிரதமர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News