விசித்திரமான பல்வேறு முறைகளில் திருமணங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில், சீனாவில் தற்போது ஒருவரின் திருமணத்தில் விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்திற்கு வந்த அத்தனை பேருக்கும் மிகவும் அதிர்ச்சியை அளித்த அந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களையும் அதிரவைத்துள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில், சென் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடக்கும் கட்டடத்தின் உள்ளேயும், வெளியேயும் மும்முரமாக திருமண வேலைகள் நடந்துவந்தன. அப்போதுதான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நடந்தேறியது.
திருமணம் நடைபெற இருந்த கட்டடத்தின் வெளியே திடீரென பெண்கள் கும்பல் ஒன்று தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மணமகன் சென்னை கண்டித்து கோஷங்கள் எழுப்பி வந்தனர். திருமணத்திற்கு வந்திந்தவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என புரிய சில நிமிடங்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!
கோஷம் நடத்தியவர்களை விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மணமகன் சென்னின் முன்னாள் காதலிகள் என்ற தெரியவந்துள்ளது. முதலில், இது ஏதோ நகைச்சுவை என நினைத்தவர்களுக்கு, நேரம் போக போகத்தான் இது மிகவும் தீவிரமான ஒன்று என தெரியவந்துள்ளது. தர்ணாவில் ஈடுப்பட்டவர்களிடம் மணமகனுக்கு எதிராக பதாகைகள், போஸ்டர்கள இருந்துள்ளன.
தர்ணாவில் ஈடுபட்ட அந்த பெண்கள், மணமகனுக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்த நிலையில், தங்கள் அனைவரையும் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்த திருமணம் நடந்தால், சென்னின் வாழ்க்கையை சீரழித்துவிடுவோம் என்றும், திருமணத்தை நிறுத்தவும் கோஷமிட்டுள்ளனர்.
தொடர்ந்து, மணமகன் சென் தர்ணாவில் ஈடுபடுவது தனது முன்னாள் காதலிகள்தான் என்றும், அதை தான் திருமணம் செய்ய உள்ள பெண்ணிடம் கூறாததற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பெண்கள் கும்பலை சமாதனப்படுத்தி திருமணம் நடத்தப்பட்டது. இருப்பினும், திருமணம் நடந்த பிறகு சென்னுக்கும் அவரது புது மனைவிக்கும் மோதல் போக்கு நிலவ வாய்ப்புள்ளது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ